
பெங்களூர் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சச்சின் போன்ற வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விலகக் கூடாது. நீண்ட காலத்திற்கு அவர்கள் விளையாட வேண்டும்.
அப்போதுதான் டெஸ்ட் கிரிக்கெட் உயிர்பிழைக்கும், இல்லாவிட்டால் செத்துப் போய் விடும்.
எனவே நான் கடவுளை வேண்டிக் கொள்வது என்னவென்றால் சச்சின் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் ஆட வேண்டும் என்பதே. அவர்ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றது நல்லதுதான். அதைப் பாராட்டுகிறேன் என்றார் ரணதுங்கா.