Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒருவேளை நாம பாகிஸ்தானை ஜெயிச்சுட்டோம்னு வச்சுக்கங்க, என்னாகும் தெரியுமா...?

India
பெங்களூர்: பாகிஸ்தான் அணியுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் ஒரு நாள் போட்டிக்கான தரவரிசையில் நாம் முதலிடத்தைப் பிடிக்க முடியும்.

டுவென்டி 20 தரிவரிசையில் நம்மால் முதலிடத்தைப் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. இங்கிலாந்துக்கு எதிரான 2 டுவென்டி போட்டிகள் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான 2 போட்டிகளில் இந்தியா வென்றாக வேண்டிய நிலை இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை.

இந்த நிலையில் தற்போது ஒரு நாள் போட்டிகளில் நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்கும் வாய்ப்பு நெருங்கி வந்துள்ளது. பாகிஸ்தான் அணியுடனான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடர் டிசம்பர் 30ம் தேதி தொடங்குகிறது.

முதல் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. 2வது போட்டி கொல்கத்தாவில் ஜனவரி 3ம் தேதியும், 3வது போட்டி டெல்லியில் ஜனவரி 6ம் தேதியும் நடைபெறும்.

இதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் ஐசிசி ஒரு நாள் போட்டிக்கான தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்க முடியும்.

தற்போது இந்தியா தரவரிசையில் 3வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 5வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் இங்கிலாந்து இருக்கிறது. அது 3016 புள்ளிகளை வைத்துள்ளது. சென்னையில் நடைபெறும் பாகிஸ்தானுடனான முதல் போட்டியில் இந்தியா வென்றால், 121 புள்ளிகளைப் பெற்று மொத்தம் 3752 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்திற்குப் போய் விடும்.

3 போட்டிகளிலும் இந்தியா வென்றால் முதலிடத்தில் தொடர முடியும். ஒரு வேளை முதல் போட்டியில் வென்று, அதற்குப் பிறகு நடக்கும் 2 போட்டிகளில் ஏதாவது ஒன்றில் தோற்றால் கூட முதலிடத்திலிருந்து இந்தியா இறங்கி விட வேண்டியதுதான்.

Story first published: Friday, December 28, 2012, 16:22 [IST]
Other articles published on Dec 28, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+