Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தானை வீழ்த்திய இங்கிலாந்து-ஸ்காட்லாந்தை வென்ற தென் ஆப்ரிக்கா

லண்டன்: டுவென்டி-20 உலக கோப்பை தொடரின் நேற்றைய லீக் போட்டிகளில் இங்கிலாந்து அணி, பாகிஸ்தானையும், தென் ஆப்ரிக்கா அணி ஸ்காட்லாந்தையும் எளிதாக வென்றன.

டுவென்டி-20 உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடக்கிறது. பி பிரிவில் பாகிஸ்தான், இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன. முதல் போட்டியில் கத்துக்குட்டி நெதர்லாந்திடம் தோல்வியடைந்த இங்கிலாந்து நேற்று வலிமைமிக்க பாகிஸ்தானை எதிர்கொண்டது.

இப்போட்டியில் தோற்றால் உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலையில் களமிறங்கிய இங்கிலாந்து நிலைமை உணர்ந்து விளையாடியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பீல்டிங் தேர்வு செய்தது.

இங்கிலாந்து அணிக்கு துவக்க வீரராக வந்த போபரா 5 ரன்களுக்கு அவுட்டானார். அடு்தது வந்த கேப்டன் பீட்டர்சன், பாகிஸ்தான் பந்துவீ்ச்சை வெளுத்து வாங்கினார். இவருக்கு நல்ல ஒத்துழைப்பு தந்த லூக் ரைட் 1 சிக்சர், 6 பவுண்டரி உட்பட 16 பந்தில் 34 ரன்கள் எடுத்தார்.

பீ்ட்டர்சன் 3 சிக்சர், 5 பவுண்டரி உட்பட 38 பந்தில் 58 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஓவைஸ் ஷா 33, கோலிங்வுட் 15 ரன்கள் எடுத்தனர். மஸ்கரன்ஹாஸ் 16, பாஸ்டர் 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடு்த்தது.

இதையடுத்து பேட் செய்த பாகிஸ்தானுக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. ஷெசத் 4, கம்ரன் அக்மல் 6 ரன்களுக்கு அவுட்டானார்கள். சல்மான் பட் 28, சோயப் மாலிக் 20 ரன்கள் எடுத்தனர். கேப்டன் யூனிஸ் கான் அதிகபட்சமாக 31 பந்தில் 46 ரன்கள் எடு்ததார். அப்ரிதி 5, மிஸ்பா 10 ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர்.

பாகிஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்து, 48 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. நாளை நடக்கும் கடைசி பி பிரிவு லீக் போட்டியில் பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

தென் ஆப்ரிக்கா வெற்றி...

நேற்று நடந்த மற்றொரு லீக் போட்டியில் தென் ஆப்ரிக்கா, ஸ்காட்லாந்தை எதிர் கொண்டது. ஸ்காட்லாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கிய தென் ஆப்ரிக்கா 20 ஓவரில் 211 ரன்கள் எடுத்தது. தென் ஆப்ரிக்கா சார்பில் ஸ்மித் 38, காலிஸ் 48, டிவிலியர்ஸ் 79 ரன்கள் எடுத்தனர்.

அடுத்து பேட் செய்த ஸ்காட்லாந்து 81 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகியது. இதையடுத்து தென் ஆப்ரிக்கா 130 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

Story first published: Wednesday, December 7, 2011, 18:27 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+