கொழும்பு: 3வது ஒரு நாள் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங்கைத் தொடங்கியது. தொடக்க விக்கெட்கள் விரைவில் வீழ சுரேஷ் ரெய்னா சற்றே இந்தியாவின் ரன் குவிப்பை காப்பாற்றினார். 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 237 ரன்கள் எடுத்தது.
முதல் இரு ஒரு நாள் போட்டிகளில் இந்தியாவும், இலங்கையும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் கொழும்பில் இன்று 3வது ஒரு நாள் போட்டி பகலிரவு ஆட்டமாக தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் டோணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். விராத் கோலியும், கெளதம் கம்பீரும் ஆட்டத்ைதத் தொடங்கினர்.
கோலி சிறப்பாக ஆடி விரைவாக ரன் குவிக்கத் தொடங்கினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக 25 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆகி விட்டார்.
கெளதம் கம்பீர் வழக்கமான ஆட்டத்ைத இன்று வெளிப்படுத்தவில்லை. 20 பந்துகளை சந்தித்த அவர் 8 ரன்களை மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார்.
துணை கேப்டன் யுவராஜ் சிங் 12 ரன்களில் வீழ்ந்தார்.
இப்படி தொடக்க விக்கெட்கள் வேகமாக சரிய, சுரேஷ் ரெய்னா சற்றைே நிதானத்துடன் ஆடி சரிவை நிறுத்தினார். 80 பந்துகளைச் சந்தித்த அவர் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
2வது போட்டியில் இந்தியாவுக்கு வெற்றி தேடித் தரும் வகையில் ஆடிய பத்ரிநாத் இப்போட்டியில், 6ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
கேப்டன்டோணி சற்றே பொறுப்புடன் ஆடி ரன் குவித்தார். சிறப்பாக ஆடிய அவர் 80 பந்துகளில் 76 ரன்களை விளாசினார்.
அவருடன் இணைந்து ஆடிய ரோஹித் சர்மாவும் சிறப்பாக ஆடி 32 பந்துகளில் 32 ரன்களைக் குவித்து அசத்தினார்.
இறுதியில் இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது.
இலங்கைத் தரப்பில் மெண்டிஸ் 3 விக்கெட்களையும், குலசேகரா, மிராண்டோ தலா 2 விக்கெட்களை எடுத்தனர்.