For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள்

By Staff

சென்னை: இந்தியா, இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் இன்று சென்னையில் தொடங்கியது. ஆண்ட்ரூ ஸ்டிராஸ் சிறப்பாக ஆடி சதமடித்தார். இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 229 ரன்களை எடுத்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான 7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில், ஐந்து போட்டிகள் முடிந்த நிலையில், மும்பை தீவிரவாதத் தாக்குதல் நடந்ததால், இங்கிலாந்து அணி ஒரு நாள் தொடரை கைவி்ட்டு விட்டு தாயகம் திரும்பி விட்டது.

இந்த நிலையில் டெஸ்ட் போட்டிகளுக்கான மைதானங்கள் மாற்றப்பட்டு, பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து டெஸ்ட் தொடரில் விளையாட மீண்டும் இந்தியா வந்துள்ளது இங்கிலாந்து.

அதன்படி முதல் டெஸ்ட் போட்டி சென்னையிலும், 2வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி மொஹாலியிலும் நடைபெறுகின்றன.

இன்று சென்னை டெஸ்ட் போட்டி தொடங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் கெவின் பீட்டர்சன் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதையடுத்து ஸ்டிராஸும், குக்கும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.

தொடக்கம் முதலே இரு வீரர்களும் நிதானமாக ரன் குவிக்க ஆரம்பித்தனர். குக் 52 ரன்கள் எடுத்த நிலையில், ஹர்பஜன் சிங் பந்தில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து வந்த இயான் பெல் 17 ரன்களிலும், கேப்டன் பீட்டர்சன் 4 ரன்களிலும் வீழ்ந்தனர்.

இருப்பினும் மறு முனையில் ஸ்டிராஸ் தொடர்ந்து நிதானமாக ஆடி சதமடித்தார். சிறப்பாக ஆடிய ஸ்டிராஸ், 123 ரன்களை எடுத்து விட்டு ஓய்ந்தார்.

காலிங்வுட் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இன்றைய ஆட்ட நேர இறுதியில், பிளின்டாப் 18 ரன்களுடனும், ஜேம்ஸ் ஆன்டர்சன் 2 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர இறுதியில், 5 விக்கெட் இழப்புக்கு 229 ரன்களை எடுத்திருந்தது.

இந்தியத் தரப்பில் ஜாகிர்கான், ஹர்பஜன் சிங் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அமீத் மிஸ்ரா ஒரு விக்கெட்டை சாய்த்தார்.

போட்டியையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீஸார், துணை ராணுவப் படையினர், கமாண்டோப் படையினர் என மொத்தம் 3000க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மும்பை - வீரர்கள் அஞ்சலி

முன்னதாக போட்டி தொடங்குவதற்கு முன்பாக, மும்பை தீவிரவாதப் போரில் பலியான கமாண்டோ வீர்ர்களுக்கு அஞ்சலி செல்லுத்திவிட்டு ஆட்டத்தைத் துவங்கினர் வீரர்கள்.

அணிகள் விவரம்


இந்தியா - டோணி, வீரேந்திர ஷேவாக், கெளதம் கம்பீர், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், வி.வி.எஸ்.லட்சுமண், யுவராஜ் சிங், ஜாகிர்கான், ஹர்பஜன் சிங், அமீத் மிஸ்ரா, இஷாந்த் சர்மா, பத்ரிநாத், முரளி விஜய்.

இங்கிலாந்து - கெவின் பீட்டர்சன், ஆன்ட்ரூ ஸ்டிராஸ், அலிஸ்டர் குக், இயான் பெல், பால் காலிங்வுட், ஸ்டீவ் ஹார்மிசன், ஆன்ட்ரூ பிளின்டாப், ஜேம்ஸ் ஆன்டர்சன், மான்டி பனீசர், ஸ்வான், மாட் பிரியர்

Story first published: Wednesday, December 7, 2011, 18:09 [IST]
Other articles published on Dec 7, 2011
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+