
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியுடனான டெஸ்ட் போட்டிகள் வரும் 22-ந் தேதி தொடங்குகிறது. முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. மொத்தம் 4 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் மோதுகின்றன.
ஆஸ்திரேலியா அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்திய அணி நாளை அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டிதான் கேப்டன் டோணிக்கு கடைசி டெஸ்ட் வாய்ப்பாக இருக்கலாம். இத்தொடரில் சிறப்பாக விளையாடினால் தொடர்ந்தும் அவர் டெஸ்ட் போட்டி கேப்டனாக நீடிப்பார்.
இரானி கோப்பையில் அசத்திய ரெய்னாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தொடக்க வீரர்களில் ஒருவரான தம்மை களம் இறக்குவார்கள் என்று முரளி விஜய் எதிர்பார்க்கிறார். ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற டெண்டுல்கர் தொடர்ந்து டெஸ்டில் விளையாடுகிறார்.
புஜாரா, வீராட்கோலி ஆகியோர் தொடர்ந்து இடம் பெற உள்ளனர். இந்திய அணி வேகப்பந்து வீச்சில் தடுமாறி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் நீக்கப்பட்ட ஜாகீர்கான் உடல்தகுதியுடன் இருக்கிறாரா? என்று தெரியவில்லை.சுழற்பந்து வீச்சில் அஸ்வின், ஓஜா உள்ளனர். பியூஸ் சாவ்லா நீக்கப்பட்டால் ஹர்பஜன்சிங்குக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.