Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உ.கோப்பை பயிற்சி-இன்று இந்தியா-பாக். மோதல்

லண்டன்: டுவென்டி-20 உலக கோப்பை தொடரின் இன்றைய பயிற்சி போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

இரண்டாவது டுவென்டி-20 உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடக்கிறது. இந்திய அணி ஏ பிரிவில் அயர்லாந்து, வங்கதேசம் அணிகளுடன் விளையாடுகிறது. இந்திய அணி வரும் 6ம் தேதி தனது முதல் லீக் முதல் போட்டியில் வங்கதேசத்தையும், 10ம் தேதி இரண்டாவது லீக் போட்டியில் அயர்லாந்தையும் சந்திக்கிறது.

இதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தலா 2 பயிற்சி போட்டியில் விளையாடுகின்றன. இந்திய அணி முதல் பயிற்சி போட்டியில் நியூசிலாந்திடம் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்நிலையில் இரண்டாவது பயிற்சி போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 10.00 மணிக்கு துவங்குகிறது. கடந்த உலக கோப்பை தொடரின் பைனலில் இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பை வென்ற நிலையில் இன்று போட்டி பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியா வெற்றி...

நேற்று நடந்து பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த நியூசிலாந்து 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. இதை எளிதாக சேஸ் செய்த ஆஸ்திரேலியா 19.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

ஆஸ்திரேலியா சார்பில் கேப்டன் பாண்டிங் 40 பந்தில் 60 ரன்களும், மைக்கேல் கிளார்க் 45 ரன்களும் எடுத்து, அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தனர்.

Story first published: Wednesday, December 7, 2011, 18:26 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+