Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு நாள் போட்டிகளில் நாமதான் தொடர்ந்து நம்பர் 1

துபாய்: ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான அணி தரவரிசையில் இந்தியா முதலிடத்தில் நீடிக்கிறது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா அபாரமாக ஆடி வருவதன் எதிரொலியாக தொடர்ந்து அது தனது முதலிடத்தைத் தக்க வைத்துள்ளது.

இந்தப் போட்டித் தொடருக்கு வரும்போதே நம்பர் ஒன் அணியாகத்தான் இந்தியா வந்தது என்பது நினைவிருக்கலாம்.

தொடர் வெற்றியால் உயர்ந்த புள்ளிகள்

தொடர் வெற்றியால் உயர்ந்த புள்ளிகள்

அடுத்தடுத்து 3 போட்டிகளில் இந்தியா வென்றதன் மூலம் கூடுதலாக 2 புள்ளிகளைப் பெற்று 121 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது இந்தியா.

2வது இடத்தில் இங்கிலாந்து

2வது இடத்தில் இங்கிலாந்து

இதுவரை நான்காவது இடத்தில் இருந்து வந்த இங்கிலாந்து தற்போது 2வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.

3வது இடத்தில் ஆஸ்திரேலியா

3வது இடத்தில் ஆஸ்திரேலியா

அதேபோல ஆஸ்திரேலிய அணி 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

4வது இடத்தில் தென் ஆப்பிரிக்கா

4வது இடத்தில் தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்க அணி 4வது இடத்திற்கு இறங்கி வந்து விட்டது.

5வது இடத்தில் இலங்கை - 6வது இடத்தில் பாக்.

5வது இடத்தில் இலங்கை - 6வது இடத்தில் பாக்.

5வது இடத்தில் இலங்கையும், 6வது இடத்தில் பாகிஸ்தானும் உள்ளன. தொடருக்கு வருவதற்கு முன்பும் கூட இதே இடங்களில்தான் இந்த இரு அணிகளும் இருந்தன.

7வது இடத்திற்கு சண்டை

7வது இடத்திற்கு சண்டை

7வது இடத்திற்கு வருவதில் நியூசிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள் இடையே கடும் அடிதடி காணப்பட்டது. இருப்பினும் நியூசிலாந்து அணி மயிரிழையில் அந்த இடத்தைப் பிடித்தது.

Story first published: Wednesday, June 19, 2013, 13:21 [IST]
Other articles published on Jun 19, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+