ஒரு நாள் தரவரிசை- இந்தியாவுக்கு 2வது இடம்
துபாய்: ஒரு நாள் போட்டிக்கான ஐசிசி தரவரிசையில் இந்தியா இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. தென் ஆப்ரிக்கா முதலிடத்திலும், ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்திலும் உள்ளன.
தென் ஆப்ரிக்க சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி தற்போது ஒரு நாள் தொடரில விளையாடி வருகிறது. முதல் ஒரு நாள் போட்டியில் வென்ற ஆஸ்திரேலிய அணி, தென் ஆப்ரிக்காவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை கைப்பற்றியது.
அதன் பின்னர் நடந்த இரண்டு போட்டிகளிலும் வென்ற தென் ஆப்ரிக்கா தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது. இந்த நிலையில் நான்காவது போட்டி நேற்று நடந்தது. இதில் கிப்ஸ் அதிரடி சதம் கடக்க தென் ஆப்ரிக்கா அபார வெற்றி பெற்று, தொடரை 3-1 என கைப்பற்றியது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று ஒரு நாள் போட்டிக்கான புதிய தரவரிசையை வெளியிட்டுள்ளது. இதில் தென் ஆப்ரிக்கா 127 புள்ளிகளை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. 122 புள்ளிகளுடன் இந்தியா இரண்டாவது இடத்தை கைப்பற்றியுள்ளது.
முதல் இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா 121 புள்ளிகளுடன் தற்போது மூன்றாவது இடத்துக்கு பின்தங்கியுள்ளது.
பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய கேப்டன் டோணி தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார். இவரை தவிர்த்து யுவராஜ் 5, ஷேவாக் 7 ஆகியோரும் 'டாப்-10' பட்டியலில் உள்ளனர். சச்சின் 11வது, கம்பீர் 17வது இடத்தில் இருக்கின்றனர்.
பவுலர்களுக்கான தரவரிசையில் 'டாப்-10'ல் எந்த இந்திய வீரரும் இல்லை. ஜாகிர் 15வது, ஹர்பஜன் 24வது இடத்தில் இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications