Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிரிஸ்பேன் போட்டி கைவிடப்பட்டது

Indian Cricket Team
பிரிஸ்பேன்: பிரிஸ்பேனில் இன்று நடந்த முதலாவது முத்தரப்பு ஒரு நாள் போட்டி தொடர் மழை காரணமாக கைவிடப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா 2 புள்ளிகள் கொடுக்கப்பட்டன.

இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. பிரிஸ்பேனில் நடந்த முதல் போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் சந்தித்தன.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 194 ரன்களில் சுருண்டது. பிரெட் லீயின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறினர்.

கெளதம் காம்பீர் 39 ரன்களும், கேப்டன் டோணி 37 ரன்களும், ரோஹித் சர்மா 29 ரன்களும் எடுத்தனர். பிரெட் லீ அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் சரிவுக்கு வித்திட்டார்.

இந்தியாவின் ஆட்டம் முடிந்ததுமே மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி தடைபட்டது.
பின்னர் மழை நின்ற பின்பு ஆட்டம் தொடங்கியது. டக்வொர்த்-லூயிஸ் விதிமுறைப்படி ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற 43 ஓவர்களில் 192 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து கில்கிறிஸ்ட், ஹோப்ஸும் ஆட்டத்தைத் தொடங்கினர். கில்கிறைஸ்ட் 10 ரன்களுடனும், ஹோப்ஸ் ரன்னுடன் விளையாடிக் கொண்டுள்ளனர். பின்னர் மீண்டும் மழை குறுக்கிட்டதால், 26 ஓவர்களாக போட்டி சுருக்கப்பட்டது.

இதையடுத்து மீண்டும் ஆட்டம் தொடர்ந்தது. இந்திய வீரர் ஸ்ரீசாந்த்தின் அபார பந்து வீச்சில் ஆஸ்திரேலிய வீரர்கள் சுருண்டனர்.

ஹோப்ஸ் 17 ரன்களையும், கில்கிறைஸ்ட் 14 ரன்களும் எடுத்தனர். 7.2 ஓவர்கள் முடிவின்போது ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் மறுபடியும் மழை குறுக்கிட்டது. தொடர்ந்து பெய்து வந்ததால், ஆட்டத்தைக் கைவிட நடுவர்கள் தீர்மானித்தனர். இதையடுத்து இரு அணிகளுக்கும் தலா 2 புள்ளிகள் வழங்கப்பட்டன.

மழை காரணமாக பிரிஸ்பேன் போட்டி பாதிக்கப்பட்டதால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:10 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+