Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4 ஸ்பின்னரை சேர்த்தோம்னு வைங்க, 20 விக்கெட்டையும் வீழ்த்தலாம்...ஸ்ரீகாந்த்

India should use 4 spinners against Aus, says Srikanth
சென்னை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 4 சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்த வேண்டும் என்று முன்னாள் தேர்வுக் குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியை நிலை குலைய வைக்க முடியும் என்பது அவரது நம்பிக்கை.

இப்படித்தான் இங்கிலாந்தை நமது சுழற்பந்து வீச்சால் புரட்டிப் போட்டுடலாம், புரோட்டா போட்டுடலாம் என்று கூறிக் கொண்டிருந்தோம். ஆனால் அவர்கள்தான் நம்மைப் பதம் பார்த்து விட்டுப் போனார்கள். இந்த நிலையில்தற்போது வந்துள்ள ஆஸ்திரேலியாவை எப்படி வீழ்த்தலாம் என்பது குறித்து ஸ்ரீகாந்த் சில யோசனைகளைத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீகாந்த் கூறுகையில்,இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் இரு அணிகளுக்கும் முக்கியமானது. டெஸ்ட் தரவரிசையில் முன்னேற இரு அணிகளும் ரன் குவிக்க ஆர்வமுடன் இருக்கும்.

சமீபத்தில் சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தது. அதற்கு பிராயசித்தமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்.

ஆஸ்திரேலிய அணியில் மைக் ஹஸ்சி, ரிக்கி பாண்டிங் ஓய்வு பெற்று உள்ளனர். அவர்கள் இல்லாதது ஆஸ்திரேலியா அணிக்கு கண்டிப்பாக பாதிப்பு இருக்கும். அந்த அணியில் பேட்டிங் சிறிது தடுமாற்றத்துடன் உள்ளது. ஷான் வாட்சன், வார்னர், மைக்கேல் கிளார்க் ஆகியோரை விரைவில் ஆட்டமிழக்க செய்துவிட்டால் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும்.

இந்திய அணி 4 சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவுடன் களம் இறங்க வேண்டும். இதனால் 20 விக்கெட்டுகளை கைப்பற்ற முடியும். மேலும் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பேட்டிங்கிலும் கைக்கொடுப்பார்கள் என்றார் அவர்.

Story first published: Tuesday, February 19, 2013, 13:52 [IST]
Other articles published on Feb 19, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+