கொழும்பு: இந்தியா, இலங்கை அணிகள் பங்கேற்கும் ஒரு நாள் தொடருக்கான அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் மற்றும் 1 டொன்டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில் இத்தொடருக்கான அட்டவணையில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதன்படி இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகள் 1 நாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மற்ற போட்டிகளில் எந்த மாறுதலும் இல்லை.
தொடருக்கான மாற்றப்பட்ட அட்டவணை:
முதல் போட்டி வரும் 28ம் தேதி தம்புலாவிலும், இரண்டாவது (ஜனவரி 31), மூன்றாவது (பிப்ரவரி 3), நான்காவது (பிப்ரவரி 5) மற்றும் ஐந்தாவது (பிப்ரவரி 8 ) போட்டிகள் கொழும்பிலும் நடக்கிறது. டொன்டி-20 போட்டி திட்டமிட்டபடி பிப்ரவரி 10ம் தேதி கொழும்பில் நடக்கும்.