Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சே..அவங்க மட்டும் செஞ்சுரி போடாம இருந்திருந்தா..!

கிங்ஸ்டன்: இலங்கை வீரர்கள் உபுல் தரங்காவும், மஹளா ஜெயவர்த்தனேவும் போட்டசதம்தான் இந்தியாவை பதம் பார்த்து விட்டது. இருவரும் நிலைத்து நின்று ஆடிய விதம், இந்தியாவை சிதறடித்து விட்டது என்பது ரசிகர்களின் கருத்தாகும்.

மேற்கு இந்தியத் தீவுகளிடம் முதலில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்ற இந்தியா, அடுத்து இலங்கையிடம் மிகப் பெரிய தோல்வியை நேற்று சந்தித்தது.

முதல் தோல்விக்கு நாம் கடைசி நேரத்தில் சுதாரிக்காமல் போனது காரணம் என்றால், 2வது தோல்விக்கு முதலிலிருந்து கடைசி வரை நாம் சுதாரிக்கவே இல்லை என்பதே காரணமாக சொல்லலாம்.

தரங்கா போட்ட 174

தரங்கா போட்ட 174

இலங்கை தொடக்க ஆட்டக்காரர் உபுல் தரங்கா பிரமாதமாக ஆடினார். இந்தியப் பந்து வீச்சை சிதறடித்த அவர் 174 ரன்களைக் குவித்ததோடு கடைசி வரை ஆட்டமிழக்காமலும் இருந்து இந்தியாவை சோதித்து விட்டார்.

ஜெயவர்த்தனேவின் சோதனை

ஜெயவர்த்தனேவின் சோதனை

அதேபோல இன்னொரு தொடக்க ஆட்டக்காரரான ஜெயவர்த்தனேவும் இந்தியாவை ரொம்பவே சோதித்து விட்டார். அவரும் சிறப்பாக ஆடி 107 ரன்களைக் குவித்து விட்டார்.

கொஞ்சம் கூட பாதிக்காத பந்து வீச்சு

கொஞ்சம் கூட பாதிக்காத பந்து வீச்சு

இந்தியாவின் பந்து வீச்சு நேற்று ரொம்பவே மோசம். இலங்கை பேட்டிங் ஆர்டருக்கு எந்தவித பாதிப்பையும் அது ஏற்படுத்தவில்லை. இதே பந்து வீச்சுதான் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் எதிரணியினரை பயமுறுத்தியது என்பதை நினைக்கவே ஆச்சரியமாக உள்ளது.

துரத்துவது முதல் முறையல்ல

துரத்துவது முதல் முறையல்ல

கடந்த ஆண்டு கூட பாகிஸ்தான் போட்ட 330 என்ற மிகப் பெரிய ஸ்கோரை இந்தியா எளிதாக துரத்தி வென்றது. எனவே நேற்றும் அதுபோலவே நடக்கும் என்றுதான் இந்திய ரசிகர்கள் நினைத்திருந்தனர். ஆனால் நடக்கவில்லையே....

பந்து வீச்சில் மிரட்டிய இலங்கை

பந்து வீச்சில் மிரட்டிய இலங்கை

இந்தியாவின் பேட்டிங்கை சீர்குலைத்த பெருமை இலங்கையின் டைட்டான பந்து வீச்சுக்கே போய்ச் சேர வேண்டும்.

ஒத்த விக்கெட்..அதுவும் அஸ்வினுக்கு

ஒத்த விக்கெட்..அதுவும் அஸ்வினுக்கு

மேற்கு இந்தியத் தீவுகள் மைதானம் வேகப் பந்து வீச்சுக்கு சாதகமானது என்றாலும் நேற்றைய போட்டியில் நமது வேகப் பந்து வீச்சாளர்களால் எதையும் செய்ய முடியவில்லை. கிடைத்த ஒரு விக்கெட்டும் ஸ்பின்னர் அஸ்வினுக்கே போனது.

தரங்காவுக்கு இதுதான்பெரிய ஸ்கோராம்

தரங்காவுக்கு இதுதான்பெரிய ஸ்கோராம்

இந்தியாவுக்கு எதிராக தரங்கா போட்ட மிகப் பெரிய ஸ்கோர் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோஹித் போனார்.. கூடவே நம்பிக்கையும் போச்சு

ரோஹித் போனார்.. கூடவே நம்பிக்கையும் போச்சு

இந்தியாவின் பேட்டிங் சீர்குலைவு சீக்கிரமே ஆரம்பித்து விட்டது. ரோஹித் சர்மா 5 ரன்களில் ஆட்டமிழந்து போனதைத் தொடர்ந்து அடுத்தடுத்து நமது வீரர்கள் நடையைக் கட்டஆரம்பித்து விட்டனர்.

கொஞ்சமாச்சும் போராடிய ரெய்னா, கார்த்திக்

கொஞ்சமாச்சும் போராடிய ரெய்னா, கார்த்திக்

சுரேஷ் ரெய்னாவும், திணேஷ் கார்த்திக்கும் கொஞ்சமாச்சும் போராட்டத்தைக் காட்டினர். இருவரும் சேர்ந்து 5வது விக்கெட்டுக்கு 53 ரன்களைச் சேர்த்தனர். ஆனால் இவர்கள் பிரிந்ததும், மறுபடியும் பிரித்து மேய ஆரம்பித்து விட்டது இலங்கை.

யார்க்கர் போட்டு ஜோலியை முடித்த மலிங்கா

யார்க்கர் போட்டு ஜோலியை முடித்த மலிங்கா

உமேஷ் யாதவுக்கு ஒரு யார்க்கர் போட்டு அவுட்டாக்கி இந்தியாவின் இன்னிங்ஸை முடித்து வைத்தார் லசித் மலிங்கா.

நமக்கு சான்ஸ் இருக்கா...

நமக்கு சான்ஸ் இருக்கா...

2 வெற்றிகளுடன் தற்போது முத்தரப்பு தொடரில் முதலிடத்தில் இருக்கிறது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. 2வது இடத்தில் இலங்கை உள்ளது. 2 தோல்விகளுடன் 3வது இடத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது இந்தியா.

இனி வரும் 2 போட்டிகளிலும் இந்தியா வென்றாக வேண்டியது கட்டாயம்.இல்லாவிட்டால் இறுதிப் போட்டிக்குப் போக முடியாத நிலை ஏற்படும்.

Story first published: Wednesday, July 3, 2013, 12:24 [IST]
Other articles published on Jul 3, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+