மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டியின் 4வது ஆட்டம் நாளை இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றV.
ஆஸ்திரேலியாவில் இலங்கை, இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் பங்குபெறும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.
இந்திய அணி விளையாடி முதல் இரு போட்டிகளிலும் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. நேற்று நடந்த 3வது போட்டியில் இலங்கையை 128 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தியது.
தற்போது ஆஸ்திரேலியா 6 புள்ளிகளும், இந்தியா 4 புள்ளிகளும், இலங்கை 2 புள்ளிகளும் பெற்றுள்ளV.
நாளை மெல்போர்னில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
இந்திய அணியினர் எதிரணியை குறைவான ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு இந்திய அணியினர் பீல்டிங்கில் தங்கள் கவனத்தை செலுத்த வேண்டும். இல்லையெனில் முதலில் பேட்டிங் செய்து 300 ரன்களுக்கு மேல் எடுத்தால் மட்டும் வெற்றி என்பது சாத்தியமாகும்.
ஆஸ்திரேலியாவின் புயல் வேக பந்துவீச்சாளர்கள் பிரட் லீ, பிராக்கென் ஆகியோரும், பேட்டிங்கில் கிளார்க், ஹைடன் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர்.
இரு அணிகளும் இதுவரை 91 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் 29 போட்டிகளில் இந்தியாவும், 55 போட்டிகளில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன.
பகல்-இரவு ஆட்டமாக நடக்க உள்ள இந்த போட்டி இந்திய நேரப்படி காலை 8.50 மணிக்கு துவங்கும்.
பேட்டிங், பவுலிங், பீல்டிங் அனைத்திலும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வெற்றி பெற இந்திய அணி வீரர்கள் முழு பலத்துடன் விளையாட வேண்டும்.