டுவென்டி - 20 போட்டியில் இன்று இந்தியா - இலங்கை மோதல்
கொழும்பு: இந்தியா, இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டுவென்டி 20 போட்டி இன்று இரவு நடைபெறுகிறது.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி, ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்று படு தெம்பாக உள்ளது. இந்த நிலையில் இரு அணிகளும் இன்று டுவென்டி 20 மோதலில் சந்திக்கின்றன.
இன்று இரவு 7 மணிக்கு கொழும்பில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் விளையாடவில்லை. அவர் ஏற்கனவே ஊர் திரும்பி விட்டார்.
இந்திய அணி விவரம்
டோணி, கம்பீர், ரவீந்திர ஜடேஜா, பிரவீன் குமார், ஜாகிர்கான், எல்.பாலாஜி, ஓஜா, இர்பான் பதான், யூசுப் பதான், சுரேஷ் ரெய்னா, வீரேந்திர ஷேவாக், இஷாந்த் சர்மா, ரோஹித் சர்மா, யுவராஜ் சிங்.
இலங்கை அணி
தில்ஷான், கபுகதேரா, பந்தாரா, டி சரம், தில்ஹாரா, பெர்னான்டோ, ஜெயசூர்யா, குலதுங்கா, மஹரூப், மலிங்கா, ஜகன் முபாரக், சில்வா, துஷாரா, உதவத்தே, வீரரத்னே.


Click it and Unblock the Notifications