பிரிஸ்பேன்: முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நாளை இலங்கையுடன் இந்தியா மோதுகிறது.
ஆஸ்திரேலியாவில் இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையேயான முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.
நேற்று தொடங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதின. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 2 புள்ளிகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில் நாளைய 2வது போட்டியும் பிரிஸ்பேனில் தான் நடக்க உள்ளது. இதில் இந்தியாவும், இலங்கையும் மோதுகின்றன.
இலங்கை அணி வீரர்கள் பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும் சம பலத்தில் உள்ளதால், அவர்களை வீழ்த்த இந்திய அணி வீரர்கள் கடுமையாக போராட வேண்டும்.
இந்திய அதிரடி ஆட்டக்காரரான யுவராஜ் சிங் நாளைய போட்டியில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் அணியில் இணைந்தால் மனோஜ் திவாரி நீக்கப்படுவார்.
இந்திய நேரப்படி காலை 8-45 மணிக்கு போட்டி துவங்குகிறது.
இந்திய அணி விவரம்:
டோணி, யுவராஜ் சிங், சச்சின், காம்பீர், ரோகித் சர்மா, உத்தப்பா, பதான், ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த், இஷாந்த் சர்மா, திணேஷ் கார்த்திக், சுரேஷ் ரெய்னா, பையூஷ் சாவ்லா, பிரவீன் குமார், முனாப் படேல், மனோஜ் திவாரி.