இந்தியா - பாக். இடையிலான 2வது டெஸ்ட் டிரா
கொல்கத்தா: இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கொல்கத்தாவில் 2வது டெஸ்ட் போட்டி நடந்தது. இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 616 ரன்களைக் குவித்தது. வாசிம் ஜாபர் இரட்டை சதம் போட்டார்.
இதையடுத்து ஆடிய பாகிஸ்தான் அணியின் மிஸ்பா உல் ஹக், கம்ரான் அக்மல் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் 456 ரன்கள் எடுத்தது. இதனால் பாலோ ஆன் தவிர்க்கப்பட்டது.
பின்னர் இந்தியா 2வது இன்னிங்ஸை ஆடியது. 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்து ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. இதனால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற 345 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்றைய இறுதி நாள் ஆட்டத்தில், போட்டியை டிரா செய்யும் நோக்கில் பாகிஸ்தான் வீரர்கள் நிதானமாக ஆடினர். யூனிஸ்கான் சிறப்பாக ஆடி சதம் அடித்தார். முகம்மது யூசுப் ஆட்டமிழக்காமல் 44 ரன்கள் எடுத்தார். ஆட்ட நேர இறுதியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 214 ரன்களை எடுத்திருந்தது. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது.
தோல்வி அடைந்திருக்க வேண்டிய இந்த ஆட்டத்தை தங்களது சாமர்த்தியமான பேட்டிங்கால் பாகிஸ்தான் அணியினர் டிராவில் முடித்து விட்டனர்.
ஆட்ட நாயகன் விருது வாசிம் ஜாபருக்குக் கிடைத்தது. முதல் இன்னிங்ஸில் இரட்ைட சதம் போட்ட ஜாபர் 2வது இன்னிங்ஸில் 56 ரன்களைக் குவித்தார்.
3வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி வருகிற 8ம் தேதி பெங்களூரில் தொடங்குகிறது. இதற்காக இரு அணியினரும் பெங்களூர் வந்து சேர்ந்துள்ளனர்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:32 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications