Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3வது ஒரு நாள் போட்டி - இந்தியா வெற்றி

கொழும்பு: கொழும்பில் நடந்த 3வது ஒரு நாள் போட்டியில் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் இரு ஒரு நாள் போட்டிகளில் இந்தியாவும், இலங்கையும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் கொழும்பில் நேற்று 3வது ஒரு நாள் போட்டி பகலிரவு ஆட்டமாக நடந்தது.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் டோணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். விராத் கோலியும், கெளதம் கம்பீரும் ஆட்டத்ைதத் தொடங்கினர்.

இந்தியாவின் தொடக்க வரிசை வீரர்கள் சரியாக ஆடவில்லை. இதனால் இந்தியாவால் பெரிய ஸ்கோரை எட்ட முடியாமல் போனது. சுரேஷ் ரெய்னா சற்று நிலைத்து ஆடி 53 ரன்கள் எடுத்தார். கம்பீர் 25 ரன்கள் சேர்த்தார்.

கேப்டன் டோணி மற்றும் பொறுப்புடன் ஆடி 76 ரன்கள் குவித்தார். அவருடன் இணைந்து ஆடிய ரோஹித் சர்மாவும் பட்டாசாக பொரிந்து 32 பந்துகளில் 32 ரன்களைக் குவித்தார்.

இறுதியில் இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது.

இலங்கைத் தரப்பில் மெண்டிஸ் 3 விக்கெட்களையும், குலசேகரா, மிராண்டோ தலா 2 விக்கெட்களை எடுத்தனர்.

இதையடுத்து விளையாடத் தொடங்கிய இலங்கை வீரர்கள், இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். ஒரு கட்டத்தில் 7 விக்கெட்களை இழந்து 94 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது இலங்கை. கேப்டன் மஹிளா ஜெயவர்த்தனே மட்டுமே சிறப்பாக ஆடி 94 ரன்களைக் குவித்தார்.

அவருக்குப் பிறகு சிறப்பாக ஆடியவர் துஷாரா மட்டுமே. அவரது ரன் பங்கு 30.

இறுதியில், 49 ஓவர்களில் 204 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியுற்றது இலங்கை.

இந்தியத் தரப்பில் ஜாகிர் கான், முனாப் படேல் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். பிரவீன் குமார் 2 விக்கெட்களைச் சாய்த்தார்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகளைக் கொண்ட தொடரில் 2-1 என்ற முன்னிலையை இந்தியா பெற்றுள்ளது.

Story first published: Wednesday, December 7, 2011, 17:16 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+