கட்டாக்: கட்டாக் நகரில் நடைபெறும் 5வது ஒரு நாள் போட்டியில், இங்கிலாந்து அணி கேப்டன் கெவின் பீட்டர்சன் அபாரமாக ஆடி சதமடித்தார். அந்த அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்தது.
முதல் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ள இந்திய அணி இந்தப் போட்டியிலும் வெல்லும் உத்வேகத்துடன் களம் இறங்கியுள்ளது.
இந்திய அணியில், இர்பான் பதான், ரோஹித் சர்மா ஆகியோர் சேர்க்கப்பட்டு, முனாப் படேல், கெளதம் கம்பீர் நீக்கப்பட்டனர்.
இங்கிலாந்து அணியில், இயான் பெல், ஜெமி ஆன்டர்சன் நீக்கப்பட்டு, ஆலிஸ்டைர் குக் மற்றும் ஹார்மிசன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
டாஸ் வென்ற கேப்டன் டோணி, இங்கிலாந்தை முதலில் பேட்டிங் செய்யப் பணித்தார். இதையடுத்து இங்கிலாந்து களம் இறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களான போபாராவும், குக்கும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 33 ரன்கள் சேர்த்த நிலையில் பிரிந்தனர். குக், ஜாகிர் கான் பந்தில் வீழ்ந்தார். இதையடுத்து போபாரா 24 ரன்கள் சேர்த்த நிலையி்ல ஜாகிர்கான் பந்தில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து கேப்டன் பீட்டர்சனும், காலிங்வுட்டும் இணைந்து ஆடி வருகின்றனர். இருவரும் இணைந்து நிலைத்து ஆடினர். குறிப்பாக பீட்டர்சன் சிறப்பாக ஆடினார்.
கடைசி வரை ஆட்டமிழக்காமல் 128 பந்துகளில் 111 ரன்களைக் குவித்தார் பீட்டர்சன். காலிங்வுட் 40 ரன்கள் சேர்த்தார்.
பிளின்டாப் டக் அவுட் ஆக, ஓவைஸ் ஷா ஆட்டமிழக்காமல் 66 ரன்களைச் சேர்த்தார்.
இறுதியில், 4 விக்கெட் இழப்புக்கு 270 ரன்களைச் சேர்த்தது இங்கிலாந்து.
இந்தியத் தரப்பில், ஜாகிர்கான் 2 விக்கெட்களையும், இஷாந்த் சர்மா, ஹர்பஜன் சிங் ஆகியோர்த தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.