லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் கிடைத்தால், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கங்குலி லார்ட்ஸ் மைதானத்தில் சர்ட்டை கழற்றி கொண்டு ஆடியது போல ஆடுவோம் என்று இந்திய வில்வித்தை அணியினர் தெரிவித்துள்ளனர்.
லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதில் 205 நாடுகளை சேர்ந்த சுமார் 16 ஆயிரம் வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்தியாவில் இருந்து 13 விளையாட்டுகளில் 81 பேர் கலந்து கொள்ள உள்ளனர். இதில் இந்திய வில்வித்தை அணியினர் பதக்கம் வென்றால், அதை விமர்சியாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

நாங்கள் தற்போது உள்ள சூழ்நிலையில், வெற்றி பெற்றால் என்ன நடக்கும் என்பது குறித்து எங்களுக்கே தெரியவில்லை. ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றால், கடந்த 2002ம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்ற போது கேப்டன் கங்குலி சட்டையை கழற்றி ஆடினார். அது போல நாங்களும் வெற்றியை கொண்டாடுவோம்.
ஒலிம்பிக் பதக்கத்தை 4வது முறையாக கைப்பற்றும் நம்பிக்கையில் கொரிய வில்வித்தை வீரர்கள் உள்ளனர். ஆனால் சமீபகாலமாக இந்தியாவிடம் தோல்வியை தழுவி வரும் கொரிய வீரர்களுக்கு, லண்டன் ஒலிம்பிக் போட்டியில் சாதிப்பது கடினம்.
கடந்த ஆண்டு(2011) எங்களுக்கு தொடர்ந்து தோல்விகளை அளித்த ஆண்டாகவே இருந்தது. இதனால் மக்கள் எங்களை திட்டி தீர்த்தனர். ஆனால் கொரியாவை வீழ்த்திய பிறகு அடுத்தடுத்து வெற்றிகளை வெற்றி வருகிறோம். மேலும் ஒலிம்பிக் போட்டியில் சாதிப்போம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார்.
ஒலிம்பிக் வில்வித்தை போட்டிகள் வரும் 27ம் தேதி துவங்குகிறது. ஆனால் துவக்க விழா அன்று இரவில் தான் நடக்க உள்ளது. இதற்காக இந்திய வில்வித்தை அணியை சேர்ந்த தீபிகா குமாரி, தருண்தீப் ராய் ஆகியோர் நேற்று காலையில் இருந்து மாலை வரை தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.