3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

தம்புல்லாவில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் படு தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இன்று 2வது ஒரு நாள் போட்டியும் அதே மைதானத்தில் தொடங்கியது.
இந்திய தரப்பில் பிரக்யான் ஓஜாவுக்குப் பதில் பிரவீன் குமாரும், கம்பீருக்குப் பதில் பத்ரிநாத்தும் சேர்க்கப்பட்டிருந்தனர்.
இலங்கை அணியில் வாஸுக்குப் பதில் தில்ஹாரா பெர்னாண்டோ சேர்க்கப்பட்டிருந்தார்.
டாஸ் வென்ற கேப்டன் டோணி முதலில் பீல்டிங் செய்ய முடிவெடுத்தார். இதையடுத்து இலங்கை அணி பேட்டிங்கைத் தொடங்கியது.
முதல் போட்டியில்கேவலமாக தோற்றதால் இன்றைய போட்டியில் வென்றாக வேண்டிய நிர்பந்தத்தில் இந்திய பந்து வீச்சாளர்கள் ஆவேசமாக பந்து வீசினர். குறிப்பாக ஜாகிர்கான் பந்து வீச்சில் அனல் பறந்தது.
சிறப்பாக பந்து வீசிய ஜாகிர் கான் ஜெயசூர்யாவை 13 ரன்களிலும், சங்கக்காராவை 2 ரன்களிலும், கேப்டன் ஜெயவர்த்தனாவை 2 ரன்களிலும் பெவிலியனுக்கு அனுப்பி இலங்கைக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.
கபுகதேராவும் ரன் எதுவும் எடுக்காமல் ஜாகிர்கான் பந்தில் வீழ்ந்தார். சமர சில்வாவை பிரவீன் குமார் அவுட் ஆக்கினார். பின்னர் வந்த தில்ஷான் 16 ரன்களுடன் இர்பான் பதான் பந்து வீச்சில் வீழ்ந்தார்.
குலசேகரா மட்டும் சற்று சமாளித்து ஆடி 25 ரன்களைச் சேர்த்தார். அவரை பிரவீன் குமார் அவுட் ஆக்கினார்.
கடைசி வரிசை வீரரான மிராண்டோ சிறப்பாக ஆடி 44 ரன்களைக் குவித்து பிரவீன் குமார் பந்தில் ஆட்டமிழந்தார்.
சுழற்பந்துப் புயல் மெண்டிஸை இந்தியப் புயல் ஹர்பஜன் சிங் டக் அவுட் செய்தார். 37.1 ஓவர்களில் இலங்கை அணி 9 விக்கெட்களை இழந்து 140 ரன்களுடன் தடுமாறிக் கொண்டிருந்தது.
இறுதியில், 38.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து இலங்கை 142 ரன்களில் சுருண்டு போனது.
இந்தியத் தரப்பில் ஜாகிர்கான் 4 விக்கெட்களையும், பிரவீன் குமார் 3 விக்கெட்களையும், ஹர்பஜன் சிங் 2 விக்கெட்களையும், இர்பான் பதான் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர் இந்தியா ஆடத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக விராத் கோலியும், இர்பான் பதானும் ஆட்டத்தைத் தொடங்கினர்.
பதான் 5 ரன்களில் வீழ, கோலி சற்றே நிலைத்து ஆடினார். 67 பந்துகளைச் சந்தித்த அவர் 37 ரன்களைச் சேர்த்தார்.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சுரேஷ் ரெய்னா 1 ரன்னில் ஆட்டமிழக்க, யுவராஜ்சிங் பொறுப்பாக ஆடி 20 ரன்களைச் ேசர்த்தார்.
கேப்டன் டோணி விக்கெட் வீழ்ச்சிைய தடுக்கும் வகையில் சற்றே பொறுப்புடனும், நிதானத்துடனும் ஆடினார். 54 ரன்களைச் சேர்த்த அவர் 3 பவுண்டரிகளுடன் 39 ரன்களைச் சேர்த்தார்.
மிகக் குறைந்த இலக்கை எட்ட இந்தியா அதிக அளவிலான விக்கெட்களை இழக்க நேரிட்டது. இருப்பினும் கடைசி நேரத்தில் களம் இறங்கிய பத்ரிநாத்தும், ஜாகிர்கானும் நிதானமாக ஆடினர். பத்ரிநாத் 54 பந்துகளைச் சந்தித்து 27 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். அவருக்கு உறுதுணையாக ஜாகிர்கான் அவுட் ஆகாமல் இருந்தார். அவரது பங்கு 2 ரன்கள்.
இறுதியில், 39.4 ஓவரில் 7 விக்கெட்களை இழந்து 143 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் ஒரு நாள் தொடரை இந்தியா சமன் செய்துள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:16 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications