
நான்காவது ஒரு நாள் போட்டிக்காக இந்திய அணி இன்று சண்டிகர் வந்து சேர்ந்தது. 2வது மற்றும் நேற்று ராஞ்சியில் நடந்த 3வது போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் மேலும் ஒரு வெற்றியை பெற்றால் இந்தியா தொடரை வெல்ல முடியும். அதேசமயம், மீதமுள்ள 2 போட்டிகளிலும் இங்கிலாந்து வென்றால் அது தொடரை கைப்பற்றி விடும்.
மேலும் இந்தியா தொடரை வென்றால் அது தற்போது கைப்பற்றியிருக்கும் ஒரு நாள் போட்டி தரவரிசையில் முதலிடத்தை தொடர்ந்து சில வாரங்களுக்குத் தக்க வைக்க முடியும்.
தொடரைக் கைப்பற்றுவது குறித்து சுரேஷ் ரெய்னா கூறுகையில், தொடரை வெல்வோம் என்ற நம்பிக்கை நிறையவே உள்ளது. சண்டிகர் அருமையான தட்பவெப்பத்துடன் உள்ளது. போட்டியில் வெல்வோம். தொடரையும் கைப்பற்றுவோம் என்றார்.
கடைசி மற்றும் 5வது ஒரு நாள் போட்டி ஜனவரி 27ம் தேதி தர்மசலாவில் நடைபெறவுள்ளது.