ஹர்பஜன்: கான்பரா செல்ல இந்திய வீரர்கள் நிபந்தனை

சிட்னியில் நடைபெற்ற 2வது கிரிக்கெட் டெஸ்டின் போது ஆஸ்திரேலிய வீரர் ஆன்ட்ரூ சைமண்ட்ஸ் மீது இந்திய வீரர் ஹர்பஜன்சிங் இனவெறியை தூண்டும் விதத்தில் நடந்து கொண்டதாக அவருக்கு 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது.
இதற்கிடையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் கூறியுள்ளதாவது, ஹர்பஜன் சிங் விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் தலையிட்டு தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் தீர்வு கிடைக்கும் வரை கான்பராவில் நடைபெறவிருக்கும் 3வது டெஸ்ட் போட்டியில் விளையாட செல்ல முடியாது என கூறியுள்ளனர்.
ஐசிசியின் முடிவை எதிர்த்து ஹர்பஜன் சிங்கும், பிசிசிஐயும் தனித்தனியாக அப்பீல் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் வீரர்களின் இந்த திடீர் முடிவால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:35 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications