இலங்கை டூர்- சென்னை வந்தது இந்திய கிரிக்கெட் அணி
சென்னை: இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி இன்று சென்னை வந்தது.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் மற்றும் ஒரு டொன்டி-20ல் போட்டியில் விளையாட இருக்கிறது.
இதில் பங்கேற்கும் இந்திய அணி நாளை இலங்கை செல்கிறது. முதல் போட்டி வரும் 28ம் தேதி தம்புலாவில் நடக்கிறது.
முன்னதாக இவர்கள் இன்று சென்னை வந்தனர். கேப்டன் தோனி மட்டும் வழக்கம் போல் சற்று முன்னதாக நேற்று இரவே வந்துவிட்டார். இவர்கள் அனைவரும் இன்று மாலை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்வார்கள் என தெரிகிறது.
இந்திய அணி நாளை காலை விமானம் மூலம் கொழும்பு புறப்பட்டு செல்கிறது. இந்திய அணியின் இலங்கை பயணத்துக்கு பாமக தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:22 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications