துபாய் மாரத்தான்-தமிழர்கள் ஆர்வமாய் பங்கேற்பு
துபாயில் கடந்த 16ம் தேதி நடந்த சர்வதேச மாரத்தான் போட்டியில் மூன்று தமிழக வீரர்கள் பங்கேற்றனர்.
துபாயில் ஆண்டுதோறும் ஸ்டாண்டர்ட் சார்டர்ட் வங்கி சார்பில் சர்வதேச மாரத்தான் போட்டி நடைபெறுகிறது. இந்தாண்டு கடந்த 16ம் தேதி நடந்தது.
சுமார் 2000 பேர் பங்கேற்ற இப்போட்டியில் துபாய் ஈடிஏ மெல்கோவில் பணிபுரிந்து வரும் தமிழகத்தை சேர்ந்த முஹம்மது இப்ராஹிம் பங்கேற்றார். இவர் பந்தய தூரமான 42.5 கிலோ மீட்டரை குறிப்பிட்ட நேரத்திற்குள் கடந்து 485 வது இடத்தைப் பெற்றார். தனது வயதுடையோர் பிரிவில் 96 வது இடத்தைப் பெற்றார்.
ஈடிஏ மெல்கோவில் பணிபுரிந்து வரும் ஜி. குமாரும், ஈடிஏ டிஎன் எஸ்ஸில் பணிபுரியும் அபுபக்கர் சித்திக் உள்ளிட்டோர் பத்து கிலோ மிட்டர் தூரத்தை கடந்தனர்.
இவர்கள் அனைவருக்கும் கடந்த வருடம் இப்போட்டிகளில் பங்கேற்ற காயல்பட்டணத்தைச் சேர்ந்த யு. அஹமது சுலைமான் பயிற்சி மற்றும் ஆலோசகராக செயல்பட்டார்.
இவர்கள் அனைவரும் வரும் பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி ராசல் கைமாவில் நடைபெற இருக்கும் சர்வதேச அரை மாரத்தான் போட்டியில் பங்கேற்க இருப்பதாக யு. அஹமது சுலைமான் தெரிவித்தார்.
மாரத்தான் என்றாலே அமீரக வாழ் இந்தியர்களுக்கு எட்டாக்கனியாக இருந்து வரும் நிலை மாறி இந்தியர்கள் அதிக அளவில் பங்கேற்று வருவது மிகவும் ஆறுதல் அளிக்கும் விஷயம். தொடர்ந்து முறையான பயிற்சி பெற்றால் இன்னும் சிறப்பான நிலையினை அடையலாம்.
மாரத்தான் போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு யுஏஇ தமிழ்ச்சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Story first published: Wednesday, December 7, 2011, 18:22 [IST]
Other articles published on Dec 7, 2011

Click it and Unblock the Notifications