மும்பை: இலங்கை எதிரான ஒரு நாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் காயம் காரணமாக ஹர்பஜன் சிங் நீக்கப்பட்டுள்ளார். ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அறிமுக வாய்ப்பு பெற்றுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் மற்றும் ஒரு 20-20 போட்டியில் விளையாட உள்ளது. முதல் ஒருநாள் போட்டி வரும் 28ம் தேதி தம்புலாவில் நடக்கிறது.
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்து பாமக தலைவர் ராமதாஸ் இந்திய அணி தொடரை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை இன்று ஸ்ரீகாந்த் தலைமையிலான தேர்வு குழுவினர் தேர்வு செய்தனர். காயம் காரணமாக ஹர்பஜன் சிங் நீக்கப்பட்டுள்ளார். ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அறிமுக வாய்ப்பு பெற்றுள்ளார்.
இலங்கை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி:
ஷேவக், காம்பீர், சச்சின், டோணி (கேப்டன்), யுவராஜ், ரோகித் சர்மா, யூசுப் பதான், ஜாகிர், இஷாந்த் சர்மா, ஓஜா, முனாப் படேல், இர்பான் பதான், சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, பிரவீண் குமார்.