இப்போதைக்கு, பாக். அணியின் பேட்டிங் ஆலோசகர் இன்சமாம் உல் ஹக்!

முன்னாள் கேப்டனான இன்சமாம் உல் ஹக் அதிக அளவில் ரன் அவுட் ஆன சாதனையை கக்கத்தில் வைத்திருப்பவர். இருந்தாலும் பெரிய அளவில் சர்ச்சைகளில் சிக்காதவர். நல்ல திறமையான ஆட்டக்காரர். ஓய்வு பெற்று விட்ட அவரை தற்போது பேட்டிங் ஆலோசகராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. நிரந்தரமான ஒரு பேட்டிங் ஆலோசகரை நியமிக்கும் வரை இன்சமமாம் பேட்டிங் ஆலோசகராக செயல்படுவார் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ள பாகிஸ்தான் அணியின் பேட்டிங் ஆலோசகராக இன்சமாம் செயல்படுவார்.
Story first published: Friday, December 14, 2012, 17:33 [IST]
Other articles published on Dec 14, 2012


Click it and Unblock the Notifications