Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே அடி... நொறுங்கிப் போனது கிங்ஸ் லெவன் பஞ்சாப்!

மொஹாலி: முதல் போட்டியில் ஜஸ்ட் 9 ரன்களில் தோல்வியைத் தழுவி ரசிகர்களை சங்கடப்பட வைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் நேற்று மொஹாலியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை ஆணித்தரமாக அடித்துத் துவைத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சந்தோஷப்படுத்தி விட்டது.

சொந்த மண்ணில் முதல் தோல்வியைச் சந்தித்தாலும் கூட அதிலிருந்து அப்படியே மீண்டு நேற்று மொஹாலியில் சென்னை அணி காட்டிய விஸ்வரூபம் ரசிகர்களை குஷிப்படுத்தியது, அதேசமயம், பஞ்சாப் அணிக்கு பெரும் பேரிடியாக அமைந்து போனது.

10 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி வெல்வது இதுவே முதல் முறையாகும். ஐபிஎல் வரலாற்றில் இது 6வது முறையாகும்.

சரி ஹைலைட்ஸ் பார்ப்போமா...?

பந்து வீச்சில் முதல் மிரட்டல்

பந்து வீச்சில் முதல் மிரட்டல்

முதலில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிதான் பேட் செய்தது. ஆரம்பத்தில் ரன் குவிப்பில் அந்த அணி இறங்கியது. இருப்பினும் சென்னை அணி சரியான இடைவெளியில் விக்கெட்களை வீழ்த்தவே பஞ்சாப் அணியால் பெரிய அளவில் ரன் குவிக்க வாய்ப்பு கிடைக்காமல் போனது.

19.5 ஓவரிலேயே

19.5 ஓவரிலேயே

சென்னை அணி கடைசி நேரத்தில் குறிப்பாக பிரேவா சிறப்பாக பந்து வீசியதால் கிங்ஸ் லெவன் அணி சீட்டுக்கட்டு போல சரியத் தொடங்கியது. 20 ஓவர்கள் முடிய ஒரே ஒரு பந்து பாக்கி இருந்த நிலையில் தனது கடைசி விக்கெட்டைப் பறி கொடுத்து ஆல் அவுட் ஆனது சென்னை சூப்பர் கிங்ஸ்.

17.2 ஓவர்களில் இலக்கைத் தொட்ட சென்னை

17.2 ஓவர்களில் இலக்கைத் தொட்ட சென்னை

138 ரன்களுடன் பஞ்சாபை சுருட்டிய சென்னை அதன் பின்னர் 17.2 ஓவர்களிலேயே தனது வெற்றி இலக்கைத் தொட்டு வெற்றியை சுவைத்தது.

இதுதான் பர்ஸ்ட்

இதுதான் பர்ஸ்ட்

ஐபிஎல் வரலாற்றில் சென்னைஅணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெல்வதுஇதுவே முதல் முறையாகும். அதேசமயம், ஐபிஎல் வரலாற்றில் இப்படி ஒரு அணி வெல்வது இது 6வது முறையாகும்.

சென்னையின் முன்னோடிகள்

சென்னையின் முன்னோடிகள்

இதற்கு முன்பு டெக்கான் சார்ஜர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளன.

மைக்கின் மகா ஆட்டம்

மைக்கின் மகா ஆட்டம்

மைக்கேல் ஹஸ்ஸியின் ஆட்டம் நேற்று வெகு சிறப்பாக இருந்தது. 54 பந்துகளைச் சந்தித்த அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 86 ரன்களைக் குவித்தார். அதில் 11 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடக்கம்.

இது 2வது பெஸ்ட்

இது 2வது பெஸ்ட்

ஐபிஎல் போட்டிகளில் ஹஸ்ஸி எடுத்த 2வது அதிகபட்ச ஸ்கோர் இது. இதற்கு முன்பு அவர் ஆட்டமிழக்காமல் 116 ரன்களைக் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராகும்.

50 பால்.. 50 ரன்

50 பால்.. 50 ரன்

மறுமுனையில் இன்னொரு தொடக்க ஆட்டக்காரரான முரளி விஜய்யும் தனக்கு கிடைத்த நல்ல பந்துகளையெல்லாம் ரன்னாக்கினார். 50 பந்துகளைச் சந்தித்த அவர் 50 ரன்களை விளாசினார். அதில் 3 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடக்கம்.

முதல் வெற்றி

முதல் வெற்றி

இந்த சீசனில் சென்னைக்குக் கிடைத்த முதல் வெற்றி இதுவாகும். இது சென்னைக்கு 2வது போட்டி. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் சென்னையில் அது தோல்வியடைந்தது.

பிரேவோ...

பிரேவோ...

நேற்றைய போட்டியில் பந்து வீச்சிலும் பீல்டிங்கிலும் கலக்கினார் சென்னையின் வேயன் பிரேவோ. அதிலும் மிக உயரமாக வந்த ஒரு பந்தை கேட்ச் பிடிக்க அவர் எடுத்த முயற்சி அனைவரையும் அசர வைத்தது. அதேபோல இனனொரு கேட்ச்சை நழுவ விடப் பார்த்த அவர் படு சாமர்த்தியமாக உடலோடு வைத்து பந்தை கீழே விழுந்து விடாமல் கெட்டியாகப் பிடித்து விக்கெட் விழ உதவினார். பந்து வீச்சில் அவர் 3 விக்கெட்களையும் சாய்த்தார்.

பஞ்சாபுக்கு டேவிட்... சென்னைக்கு மைக்

பஞ்சாபுக்கு டேவிட்... சென்னைக்கு மைக்

அண்ணன் தம்பிகளான மைக் ஹஸ்ஸியும், டேவிட் ஹஸ்ஸியும்தான் தத்தமது அணிகளின் டாப் ஸ்கோரர்களாக நேற்று உருவெடுத்தனர். பஞ்சாப் அணி சார்பில் ஆடிய டேவிட் ஹஸ்ஸி 41 ரன்களைக் குவித்தார். சென்னைக்கு மைக் ஹஸ்ஸி வெற்றி தேடித் தந்தார்.

Story first published: Thursday, April 11, 2013, 8:49 [IST]
Other articles published on Apr 11, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+