For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் 6: சென்னை- கொல்கத்தா போட்டியின் சில ஹைலைட்ஸ்.....

By Mathi

சென்னை: நடப்பு ஐபிஎல் 6வது தொடரில் சென்னையில் நேற்று நடைபெற்ற 38வது லீக் போட்டியான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையேயான ஆட்டத்தின் சில முக்கிய ஹைலைட்ஸ்கள் இவை...

- சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அற்புதமான ஆட்டத்தால் அந்த அணி 20ஓவர் முடிவில் 200 ரன்களை எட்டியது...

-சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்கம் முதலேயான சொதப்பல் பந்துவீச்சு பல நேரங்களில் எரிச்சலூட்டக் கூடியதாக இருந்தது.

- சென்னை அணியின் நன்னெஸ் 4 ஓவர்கள் வீசி 50 ரன்களை அள்ளிக் கொடுத்தார். கொல்கத்தா அணியின் காலிஸும் கூட 4 ஓவர்கள் வீசி 50 ரன்களை அள்ளிக் கொடுத்தார்.

IPL 2013 Match 38 Highlights: CSK Vs KKR

- சென்னை அணியின் மொஹித் சர்மா, பிராவோ, மோரிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். பிராவோ விக்கெட்டை வீழ்த்திய போது வழக்கமான தமது டான்ஸை மறக்கவில்லை...

- கொல்கத்தாஅணியின் நரின் மற்றும் பாட்டியா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 பவுண்டரிகள் 6 சிக்சர்களை விளாசியது

- கொல்கத்தா அணி 20 பவுண்டரிகள், 5 சிக்சர்களை விளாசியது.

- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக முதல் முறையாக நேற்று விளையாடினார் மெக்கல்லம். அவர் வெறும் 6 ரன்களில் அவுட் ஆனார்.

- சென்னை அணியின் ஹசி சதம் அடிக்கும் வாய்ப்பை 5 ரன்களில் நழுவ விட்டார்... நடப்பு ஐபிஎல் தொடரில் 445 ரன்களை எட்டியிருக்கும் ஹசி தற்போதைய சீசனில் அடித்திருக்கும் 4வது அரை சதம்..

- கொல்கத்தாவின் பிஸ்லாவும் கூட சதம் அடிக்கும் வாய்ப்பை 8 ரன்களில் நழுவ விட்டார்...

- கொல்கத்தா அணி கடைசி 5 ஓவர்களில் 75 ரன்கள் எடுக்க வேண்டிய ஒரு நிலை இருந்தது. ஆனால் அந்த அணியின் பிஸ்லாவும் மோர்கனும் இந்த நெருக்கடியை ஓரளவு தணித்தனர்.

- கொல்கத்தா அணி கடைசி ஓவரில் 19 ரன்களை எடுக்க வேண்டிய நிலை இருந்தது.

- சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மோரிஸ் நிலைமையை உணர்ந்து மிகவும் பொறுப்புடன் அற்புதமாக பந்து வீசி வெறும் 4 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுக்க வழக்கம் போல கடைசி ஓவர் த்ரில் வெற்றியை ருசித்தது சென்னை அணி.

Story first published: Monday, April 29, 2013, 12:27 [IST]
Other articles published on Apr 29, 2013
English summary
In a high-scoring game, Chennai Super Kings held their nerve to edge defending champions Kolkata Knight Riders by 14 runs in Match 38 of IPL 2013 here on Sunday evening.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+