Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெல்லிக்கு இதை விட கேவலமான தோல்வி இனி கிடைக்காது!

ஹைதராபாத்: டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு இப்படி ஒருதோல்வி இனி கிடைக்க வாய்ப்பில்லை.அப்படி ஒரு அதிர்ச்சி வைத்தியத்தை நேற்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அளித்தது.

என்ன நடக்கிறது என்பதே தெரியாத அளவுக்கு அப்படியே சீட்டுக் கட்டு போல சரிந்து போய் வெறும் 80 ரன்களுக்கு சுருண்டு போனது டெல்லி டேர்டெவில்ஸ், நேற்றைய ஐபிஎல் போட்டியில்.

டெல்லிக்கும், ஹைதராபாத்துக்கும் இடையே நேற்று நடந்த போட்டியின் சில ஹைலைட்ஸ்....

டெல்லிக்கு 8வது தோல்வி...

டெல்லிக்கு 8வது தோல்வி...

டெல்லி அணி இதுவரை 11 போட்டிகளில் ஆடி 8 தோல்விகளை சந்தித்துள்ளது.

நாக் அவுட்

நாக் அவுட்

இந்த தோல்வியின் மூலம் பிளே ஆப் பிரிவுக்கான போட்டியிலிருந்து நீக்கப்பட்டு விட்டது டெல்லி டேர்டெவில்ஸ்.

புனேவும் கூடவே வெளியேறியது

புனேவும் கூடவே வெளியேறியது

டெல்லியைப் போலவே தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்த புனே வாரியர்ஸ் இந்தியா அணியும் பிளே ஆப் பிரிவுக்கான போட்டியிலிருந்து விலக்கப்பட்டுள்ளது.

3வது இடத்தில் ஹைதராபாத்

3வது இடத்தில் ஹைதராபாத்

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இது 7வது வெற்றியாகும். புள்ளிகள் பட்டியலில் அது தற்போது 3வது இடத்திற்கு வந்து விட்டது.

ஹைதராபாத்தை சாமியாக வந்து காத்த சமி

ஹைதராபாத்தை சாமியாக வந்து காத்த சமி

ஹைதராபாத் அணியின் டேரன் சமி, தனது ஆல்ரவுண்ட் ஆட்டத்துக்காக ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். சமி முதலில் 2 விக்கெட்களை வீழ்த்தினார். ஒரு ரன் அவுட்டுக்கு உதவினார். பின்னர் ஆட்டமிழக்காமல் 18 ரன்களைக் குவித்தார்.

6 பவுலர்களுக்கும் விக்கெட்

6 பவுலர்களுக்கும் விக்கெட்

ஹைதராபாத் அணி சார்பில் 6 பேர் பந்து வீசினர். அத்தனை பேருக்கும் விக்கெட் கிடைத்தது. ஸ்டெயின், பெரைராவுக்கு தலா 2 விக்கெட்கள் கிடைத்தன. அமீத் மிஸ்ரா, இஷாந்த் சர்மா மற்றும் கரன் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

உன்முக்த் மட்டுமே

உன்முக்த் மட்டுமே

டெல்லி சார்பில் கொஞ்சமாச்சும் விளையாடியவர் என்றால் அது உன்முக்த் சந்த் மட்டுமே . அவர் 17 ரன்கள் எடுத்தார்.

ஒரு சிக்ஸர் மட்டுமே

ஒரு சிக்ஸர் மட்டுமே

டெல்லி அணி தனது பேட்டிங்கின்போது ஒரே ஒரு சிக்ஸ் மட்டுமே போட்டது. 4 பவுண்டரிகளை அந்த அணியின் வீரர்கள் விளாசினர்.

81 ரன்கள் எடுக்க போராடிய ஹைதராபாத்

81 ரன்கள் எடுக்க போராடிய ஹைதராபாத்

டெல்லி அணிதான் 80 ரன்களில் சுருண்டது என்றால் 81 ரன்களை எடுப்பதற்குள் படாதபாடு பட்டு விட்டது ஹைதராபாத் அணி. இதற்கு அந்த அணிக்கு 13.5 ஓவர்கள் தேவைப்பட்டது. நான்கு விக்கெட்களையும் இழந்தது அந்த அணி.

Story first published: Sunday, May 5, 2013, 12:07 [IST]
Other articles published on May 5, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+