For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அட...அட.. அட.. மேட்ச்சுன்னா, இது மேட்ச்!

மொஹாலி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் ஆடி 191 ரன்களைக் குவித்ததைப் பார்த்து கொஞ்சம் கூட அசராமல், டேவிட் மில்லர் போட்ட அட்டகாசமான சதத்தால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அந்த பெரிய ஸ்கோரை அழகாகக சேஸ் செய்து சூப்பர் வெற்றியைப் பெற்றது.

வெறும் 38 பந்துகளில் சதத்தைப் போட்டு கடைசி வரை ஆட்டமிழக்காமல் 'பில்லர்' போல நின்றிருந்தார் மில்லர்.

கெய்ல் மூலம் புனே வாரியர்ஸுக்கு முன்பு ஷாக் கொடுத்து மிதப்புடன் காணப்பட்ட பெங்களூருக்கு அதே பாணியிலான வைத்தியத்தை மில்லர் மூலம் பஞ்சாப் அணி கொடுத்து அரட்டி விட்டது.

சரி ஹைலைட்ஸ் பார்ப்போமா...

ஒத்த ஆளாக

ஒத்த ஆளாக

நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணியில் யாருமே சரியாக ஆடவில்லை. ஆனால் டேவிட் மில்லர் மட்டுமே தனி மனிதராக ஆடி அணியைக் கரை சேர்த்தார்.

அவருக்கே நம்ப முடியவில்லையாம்

அவருக்கே நம்ப முடியவில்லையாம்

தான் ஆடிய விதம் குறித்து பின்னர் மில்லர் கூறுகையில், இதை நானே எதிர்பார்க்கவில்லை. ஆனால் பந்துகள் எனக்குச் சாதகமாக வந்ததால் சிறப்பாக அடித்து ஆட முடிந்தது என்றார் மில்லர்.

சிக்ஸ் போட்டு முடிச்ச 'மில்லர்சிங்'

சிக்ஸ் போட்டு முடிச்ச 'மில்லர்சிங்'

போட்டியை ஒரு சூப்பர் சிக்ஸ் போட்டு மங்களகரமாக முடித்து வைத்தார் மில்லர். அதன் மூலம் அவருடைய சதமும் வந்து சேர்ந்தது.

2 ஓவர் மிச்சம்

2 ஓவர் மிச்சம்

2 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் பஞ்சாப் அணி தனது சேசிங்கை வெற்றிகரமாக முடித்ததால் பஞ்சாப் ரசிகர்கள் மேலும் குஷியடைந்தனர்.

3வது அதி வேக செஞ்சுரி

3வது அதி வேக செஞ்சுரி

ஐபிஎல் வரலாற்றில் இது மூன்றாவது அதி வேக சதமாகும். இதற்கு முன்பு 30 பந்துகளில் கெய்ல் சதம் போட்டுள்ளார். 37 பந்துகளில் யூசுப் பதான் ஒரு சதமடித்துள்ளார்.

மில்லருக்கு இதுதான் பர்ஸ்ட்

மில்லருக்கு இதுதான் பர்ஸ்ட்

டேவிட் மில்லருக்கு டுவென்டி 20 கிரிக்கெட் வரலாற்றில் இதுதான் முதல் சதமாகும்.

பையனுக்கு வயசு 23தான்

பையனுக்கு வயசு 23தான்

மில்லருக்கு வயது 23தான் ஆகிறது. தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வீரர் இவர்.

மில்லரை பிடிக்க முடியாத கோஹ்லி

மில்லரை பிடிக்க முடியாத கோஹ்லி

மில்லர் 21 பந்துகளில் 41 ரன்கள் எடுத்திருந்தபோது, அவர் அடித்த பந்தை பெங்களூர் கேப்டன் விராத் கோஹ்லி பிடிக்க முயன்று நழுவ விட்டார். இதனால் தப்பிப் பிழைத்த மில்லர் அடுத்த 17 பந்துகளில் 60 ரன்களைக் குவித்து கோஹ்லியை டென்ஷனாக்கினார்.

7 சிக்ஸு... 8 ஃபோரு...!

7 சிக்ஸு... 8 ஃபோரு...!

இருப்பினும் கெய்ல் அளவுக்கு சிக்ஸ் மழை பெய்யவில்லை மில்லர். அவர் விளாசிய சிக்ஸர்கள் 7 ஆகும். பவுண்டரிகள் 8.

கடைசி 6 ஓவர்களில் 99 ரன்கள்

கடைசி 6 ஓவர்களில் 99 ரன்கள்

பஞ்சாப் அணி கடைசி 6 ஓவர்களில் 99 ரன்களைக் குவித்தது.

சதீஷும் பிரமாத சப்போர்ட்

சதீஷும் பிரமாத சப்போர்ட்

மில்லருக்குத் துணையாக ராஜகோபாலன் சதீஷும் நிலைத்து நின்று ஆடினார். இருவரும் சேர்ந்து 5வது விக்கெட் ஜோடியாக130 ரன்களை ஆட்டமிழக்காமல் குவித்தனர்.

சதீஷுக்கு 27

சதீஷுக்கு 27

சதீஷ் 18 பந்துகளில் 27 ரன்களைக் குவித்தார். அதில் 2 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடக்கம்.

வினய்குமார் பாவம்

வினய்குமார் பாவம்

பெங்களூர் அணியின் பந்து வீச்சாளர் வினய் குமாரை கடுமையாக பதம் பார்த்து விட்டது பஞ்சாப் அணி.வினய் குமார் 4 ஓவர்களை வீசி 48 ரன்களைக் கொடுத்தார். ஒரே ஒரு விக்கெட் மட்டுமே அவரால் பறிக்க முடிந்தது.

முதல் போட்டியில் புஜாராவுக்கு 51

முதல் போட்டியில் புஜாராவுக்கு 51

நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் முறையாக நேற்றைய போட்டியில் சட்டேஸ்வர் புஜாரா ஆடினார். முதல் போட்டியிலேயே சதமும் அடித்தார். அவர் போட்ட ரன்கள் 51 ஆகும்.

மறுபடியும் கெய்லுக்கு ஆரஞ்சு தொப்பி

மறுபடியும் கெய்லுக்கு ஆரஞ்சு தொப்பி

நேற்றைய போட்டியில் பேட்டிங் புயல் கெய்ல் 33 பந்துகளில் 61 ரன்களைக் குவி்ததார். அதில் 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடக்கம். அவர் 2 ரன்கள் எடுத்தபோது சென்னை சூப்பர் கிங்ஸ் ஹஸ்ஸியின் ரன் குவிப்பைத் தாண்டி மீண்டும் ஆரஞ்சுத் தொப்பியைக் கைப்பற்றினார்.

புனே வாரியர்ஸ் அணியை நையப் புடைத்து கடுமையான வெற்றியைப் பெற்ற கெய்ல் அன் கோவுக்கு நேற்று அதே பாணியிலான அதிரடியைப் பதிலாக கொடுத்து அனுப்பி வைத்து விட்டது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.

Story first published: Tuesday, May 7, 2013, 8:58 [IST]
Other articles published on May 7, 2013
English summary
David Miller's sensational unbeaten 101 off just 38 balls stunned Royal Challengers Bangalore. The left-hander single-handedly took Kings XI Punjab to a six-wicket victory here at PCA Stadium on Monday night. It was unbelievable hitting from the South African batsman. Miller turned the game from a hopeless situation with the third fastest hundred in IPL history. Miller finished the game off with a six, which also gave him the century. KXIP successfully chased 191 with 2 overs remaining.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+