Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொல்கத்தாவுக்கு இன்னும் (லேசா) உயிர் இருக்கு...!

புனே: புனே வாரியர்ஸை 46 ரன்கள் வித்தியாசத்தில் எளிமையாக தோற்கடித்ததன் மூலம் தனது பிளே ஆப் கனவை தக்க வைத்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இனி வரும் போட்டிகளில் பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் பிளே ஆப் கனவு அதற்கு நனவாகலாம்.

புனேவில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் புனேவுடன் கொல்கத்தா மோதியது. முதலில் ஆடிய கொல்கத்தா 152 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய புனே, கொல்கத்தாவின் பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 106 ரன்களோடு ஆட்டமிழந்தது.

இந்த வெற்றி மூலம் கொல்கத்தா 10 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. இது புனேவுக்கு 11வது தோலவியாகும். கடைசி இடத்தில் அது உட்கார்ந்திருக்கிறது.

ஹைலைட்ஸ் பார்க்கலாமா...

பிப்டி போட்ட கம்பீர்

பிப்டி போட்ட கம்பீர்

கொல்கத்தாவின் பேட்டிங்கின்போது கேப்டன் கம்பீர் சிறப்பாக ஆடி அரை சதம் போட்டார். அதேபோல அந்த அணியின் ரியான் டென்டஸ்சாட் 21 பந்துகளில் 31 ரன்களை விளாசினார். இதுதான் அவருக்கு முதல் ஐபிஎல் போட்டியாகும்.

கம்பீருக்கு இது 4வது அரை சதம்

கம்பீருக்கு இது 4வது அரை சதம்

கம்பீருக்கு இந்தத் தொடரில் இது 4வது அரை சதமாகும். இதுவரை அவர் 370 ரன்களைக் குவித்துள்ளார்.

3 எடுத்த புவனேஷ்குமார்

3 எடுத்த புவனேஷ்குமார்

புனே அணியின் பந்து வீச்சாளர் புவனேஷ் குமார் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 25 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

வெளியில் போய் முதல் வெற்றி

வெளியில் போய் முதல் வெற்றி

நடப்பு ஐபிஎல் தொடரில் வெளியூர் மைதானத்தில் தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வந்தது கொல்கத்தா.நேற்றுதான் முதல் வெற்றியை அது ருசித்தது.

தொடர்ந்து 8 முறை

தொடர்ந்து 8 முறை

புனே அணி தொடர்ந்து 8வது முறையாக நேற்று தோல்வியைத் தழுவியது.

பாலாஜி அபாரம்

பாலாஜி அபாரம்

கொல்கத்தாவின் லட்சுமிபதி பாலாஜி சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்களைச் சாய்த்தார். ஜேக்கஸ் காலிஸ், இக்பால்அப்துல்லா, சுனில்நரைன் ஆகியோர் தலா 2 விக்கெட்களை எடுத்தனர்.

தனியாக போராடிய மாத்யூஸ்

தனியாக போராடிய மாத்யூஸ்

புனே அணியைக் கரை சேர்க்க ஏஞ்சலோ மாத்யூஸ் கடுமையாகப் போராடினார். 4 சிக்சர்களை விளாசிய அவர் 28 பந்துகளில் 40 ரன்களைக் குவித்தார். இருந்தாலும் அந்த அணியின் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.

காஷ்மீரிலிருந்து முதல் முறையாக ரசூல்

காஷ்மீரிலிருந்து முதல் முறையாக ரசூல்

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பர்வேஸ் ரசூல் ஐபிஎல் போட்டியில் நேற்று அறிமுகமானார். இவர்தான் ஐபிஎல் போட்டியில் ஆடும் முதல் காஷ்மீர் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

பதான் வீரம் எங்கே போச்சு...?

பதான் வீரம் எங்கே போச்சு...?

யூசுப் பதான் தொடர்ந்து சொதப்பி வருகிறார். நேற்றைய போட்டியில் அவர் வெறும் 3 ரன்களை மட்டுமே எடுத்தார்.

Story first published: Friday, May 10, 2013, 12:44 [IST]
Other articles published on May 10, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+