Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'வாரியர்ஸா' இல்லை வெற்றிக்குப் 'பேரியர்ஸா', பாவம் அவங்களே குழம்பிட்டாங்க!

புனே: உண்மையிலேயே கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு நேற்றைய நாள் ரொம்பவே சந்தோஷமான நாள்தான். இருக்காதா பின்னே... இதுவரை நடந்த ஐந்து ஐபிஎல் தொடர்களிலும் முதல் போட்டியில் ஒருவாட்டி கூட இந்த அணி வென்றதே இல்லை. இந்த முறைதான் தொடக்கத்திலேய வெற்றியைச் சுவைத்துள்ளது.

புனே வாரியர்ஸ் அணியை தூக்கிப் போட்டு மிதித்து அபாரமான வெற்றியைப் பெற்று 6வது ஐபிஎல் தொடரை வெற்றிகரமாக தொடங்கியுள்ளது கில்கிறைஸ்ட் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.

இதுகுறித்து கில்கிறைஸ்ட் மிகப் பெருமையுடன் சொல்லியுள்ளார். தனது அணியின் வெற்றி சிறப்பானது என்றும் அவர் வர்ணித்துள்ளார்.

சரி, புனே வாரியர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மோதலில் நடந்த சுவாரஸ்ய நிமிஷங்களைப் பார்ப்போமா...!

'வாரியர்ஸா' இல்லை 'பேரியர்ஸா', பாவம் அவங்களே குழம்பிட்டாங்க

'வாரியர்ஸா' இல்லை 'பேரியர்ஸா', பாவம் அவங்களே குழம்பிட்டாங்க

வாரியர்ஸ் என்று பெயர் வைத்துக் கொண்டுள்ள புனே அணி வீரர்கள், ரொம்ப சொதப்பலாக ஆடுகிறார்கள். முதல் போட்டியில் தோற்ற அவர்கள், 2வது போட்டியில் சுதாரிக்காமல், 2வது போட்டியிலும் மந்தமாக ஆடி தோற்றனர்.

முதல் போட்டிக்கு 2வது போட்டி மகா மோசம்

முதல் போட்டிக்கு 2வது போட்டி மகா மோசம்

முதல் போட்டியில், 127 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் சோர்ந்தது புனே வாரியர்ஸ். 2வது போட்டியான நேற்று 99 ரன்களை மட்டுமே எடுத்து வீழ்ந்தது.

முதல் போட்டியிலேயே வெற்றி

முதல் போட்டியிலேயே வெற்றி

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இதுவரை தான் ஆடிய முதல் போட்டியில் வென்றதே இல்லை. இப்போதுதான் முதல் முறையாக அது வெற்றியைச் சுவைத்துள்ளது.

புவனேஸ்வரை தண்டித்த கில்கிறைஸ்ட்

புவனேஸ்வரை தண்டித்த கில்கிறைஸ்ட்

புனேவின் புவனேஸ்வர்குமார் வீசிய முதல் ஓவரில் ஒரு சிக்ஸ், 2 பவுண்டரிகளை அடித்துத் தண்டித்தார் கில்கிறைஸ்ட்.

அடுத்தடுத்து 5...

அடுத்தடுத்து 5...

பஞ்சாப் வீரர் மனான் வோரா, அடுத்தடுத்து தொடர்ச்சியாக 5 பவுண்டரிகளை விளாசி அசரடித்தார்.

நல்லவேளை யுவராஜ் சிங் வரலை

நல்லவேளை யுவராஜ் சிங் வரலை

நேற்றைய ஆட்டத்தில் முதுகு வலி காரணமாக யுவராஜ் சிங் விளையாடவில்லை. அவரும் வந்திருந்தால் புனேவை போட்டு துவைத்திருப்பார்கள் பஞ்சாப் காரர்கள்.

Story first published: Monday, April 8, 2013, 15:02 [IST]
Other articles published on Apr 8, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+