Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாட்சன் வர்ற வரைக்கும் எல்லாம் நல்லாத்தாய்யா போய்ட்டிருந்துச்சு...!

ஜெய்ப்பூர்: 10வது ஓவர் வரைக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸின் ஆதிக்கத்தின் கீழ்தான் இருந்தது. வெற்றி நிச்சயம் என்பது உறுதியாகியிருந்தது. ஆனால் ஷேன் வாட்சன் வந்தார்... எல்லாமே மாறிப் போனது. வெறறியும் நம்மை விட்டு ஓடிப் போனது.

அடுத்த 7.3 ஓவர்களில் போட்டியே முடிந்து போனது. ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றியைத் தட்டிக் கொண்டு போய் விட்டது. சென்னையின் வெற்றிக் கனவு சின்னாபின்னமாகி வி்ட்டது.

என்ன ஒருமேட்ச்.. முதலில் ஒரு லோ ஸ்கோர்.. அடுத்து ஒரு சேசிங்...அதில் முடங்கிப் போன ராஜஸ்தான்... ஆனால் வாட்சன் புண்ணியத்தால் அதிரிபுதிரியான வெற்றி.. சரியான கிரிக்கெட் விருந்து நேற்று கிடைத்தது ஜெய்ப்பூரில்..

ஹைலைட்ஸ் பார்ப்போம்...!

வாட்சனின் அட்டாக் ஆட்டம்

வாட்சனின் அட்டாக் ஆட்டம்

ஷேன் வாட்சன் 34 பந்துகளை மட்டுமே சந்தித்தார். அதில் 70 ரன்களை நொறுக்கிக் குவித்தார். 6 சிக்ஸ், 6 பவுண்டரிகளுடன் ராஜஸ்தான் கோட்டைகளை விட பலமாக நின்று விட்டார்.

பாலைவனச் சோலை

பாலைவனச் சோலை

பாலைவனத்தில் திடீரென குறுக்கிடும் சோலை போல நேற்று வாட்சனின் ஆட்டம் விளங்கியது. முக்கிய வீரர்கள் எல்லாம் அவு���்டாகி முடங்கி விட, வாட்சன் மட்டும் ஆணித்தரமாக நின்றாடி வென்றெடுத்தார் போட்டியை.

பின்னிட்டாருய்யா பின்னியும்

பின்னிட்டாருய்யா பின்னியும்

ஸ்டூவர்ட் பின்னியும் விடவில்லை. தன் பங்குக்கு 23 பந்துகளை மட்டுமே சந்தித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் 41 ரன்களைக் குவித்து வெற்றியை நோக்கி அணியை இட்டுச் சென்றார். இவர் அணிக்குத் தேவையான ரன்களை சிக்ஸ் மூலம் பெற்று ஏற்கனவெ வெந்து போன சென்னையின் புண்ணில�� ராக்கெட் விட்டு வேடிக்கை காட்டினார்.

50க்குள் 4 போய்

50க்குள் 4 போய்

முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 50 ரன்களைத் தொடுவதற்கு முன்பே 4 விக்கெட்களை இழந்து தவித்துக் கொண்டிருந்தது. ஆனால் வாட்சனும், பின்னியும் சேர்ந்து அணியி்ன் நம்பிக்கையை தூக்கி நிறுத்தினர்.

சொந்த ஊரில் ஒரு தோல்வியுமில்லை

சொந்த ஊரில் ஒரு தோல்வியுமில்லை

இந்த வெற்றியின் மூலம், நடப்பு தொடரில் ஜெய்ப்பூரில் நடந்த போட்டிகளில் ஒன்றிலும் ராஜஸ்தான் தோற்றதில்லை. இங்கு விளையாடிய 8 போட்டிகளையும் அது வென்றுள்ளது.

20 புள்ளிகளுடன் 2வது இடத்தில்

20 புள்ளிகளுடன் 2வது இடத்தில்

தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 புள்ளிகளுடன் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பிளே ஆப் பிரிவுக்கும் கிட்டத்தட்ட அவர்கள் தகுதி பெற்று விட்டனர்.

ஆனா நாமதான் பர்ஸ்ட்

ஆனா நாமதான் பர்ஸ்ட்

முதலிடத்தில் தற்போது சென்னைதான் உளள்ளது. சென்னையும் 20 புள்ளிகளுடன்தான் உள்ளது. ஆனால் நெட் ரன்��ேட், ராஜஸ்தானை விட சற்று அதிகம் இருப்பதால் நாம் முதலிடத்தில் தொடர்கிறோம்.

ஒரு சிக்ஸ் கூட கி்டையாது

ஒரு சிக்ஸ் கூட கி்டையாது

சென்னை சூப்பர் கிங்ஸின் பேட்டிங்கில் ஏகப்பட்ட துயரங்கள். அதில் முக்கியமானது யாரும் ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை. கஷ்டப்பட்டு அரை சதம் போட்ட முரளி விஜய் கூட சிக்ஸர் எதையும் அடிக்கவில்லை.

சிக்ஸ் மழை பொழிந்த ராஜஸ்தான்

சிக்ஸ் மழை பொழிந்த ராஜஸ்தான்

அதேசமயம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிக்ஸ�� மழை பொழிந்து விட்டது. மொத்தம் 9 சிக்ஸர்களை அந்த அணி விளாசியது. அதில் 6 சிக்ஸர்களை வாட்சனே போட்டார்.

ஒரே ஒவர் போட்ட அஸ்வின்

ஒரே ஒவர் போட்ட அஸ்வின்

நேற்று அஸ்வின் ஒரே ஒரு ஓவர்தான் போட்டார். அதில் அவர் கொடுத்த ரன்கள் 23. மறுபடியும் அஸ்வின் பந்து வீச அழைக்கப்படவில்லை.

4 ரன் தேவை.. அவுட்டான வாட்சன்

4 ரன் தேவை.. அவுட்டான வாட்சன்

வெற்றிக்குத் தேவையான ரன்கள் 4 என்ற நிலையில் பிராவோ வீசிய பந்தை அடித்தார் வாட்சன். ஆனால் போல்ட் ஆகிப் போனார்.

ஹஸ்ஸிக்கு மீண்டும் ஆரஞ்சு தொப்பி

ஹஸ்ஸிக்கு மீண்டும் ஆரஞ்சு தொப்பி

அதிக ரன்கள் எடுத்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பி நேற்று ஒரே நாளில் கெய்லுக்கும், ஹஸ்ஸிக்கும் மாறி மாறி வந்தது. முதலில் நடந்த போட்டியின்போது கெய்ல் இந்தத் தொப்பியைப் பெற்றார். ஆனால் 2வது போட்டியின்போது தொப்பி ஹஸ்ஸிக்கு மாறியது.

614 ரன்கள்

614 ரன்கள்

மைக்கேல் ஹஸ்ஸி தற்போது 614 ரன்களைக் குவித்து முதலிடத்தில் இருக்கிறார்.

ராஜஸ்தானுக்கு எதிரான பெஸ்ட் ஓப்பனிங்

ராஜஸ்தானுக்கு எதிரான பெஸ்ட் ஓப்பனிங்

முரளி விஜய்யும், ஹஸ்ஸியும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 83 ரன்களைச் சேர்த்தனர். ராஜஸ்தான் அணிக்கு எதிரான சென்னையின் சிறந்த முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் இதுதான்.

Story first published: Monday, May 13, 2013, 8:03 [IST]
Other articles published on May 13, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+