Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்னும் ஒரே ஒரு போட்டிதான்... அதையும் பிச்சு உதறுமா சென்னை?

சென்னை: முதலில் பேட்டிங்கிலும், பின்னர் பந்து வீச்சிலும் பிரமாதப்படுத்தியதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பான வெற்றியைப் பெற்று மீண்டும் நம்பர் ஒன் நிலைக்குப் போக முடிந்தது.

முதலில் கேப்டன் டோ்ணி அதிரடியாக ஆடி அரை சதம் போட்டார். பின்னர் பந்து வீச்சாளர்கள் ஒட்டுமொத்தமாக சிறப்பாக பந்து வீசி டெல்லி டேர்டெவில்ஸ் அணியை புரட்டிப் போட்டு விட்டனர்.

தொடக்கம் சிறப்பாகவும், மத்தியில் சரிந்தும் காணப்பட்ட சென்னையின் ரன் குவிப்பை டோணி வந்து நிமிர்த்து நிறுத்தி விட்டார். அவரது அதிரடி ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நல்ல ஸ்கோரை எட்ட முடிந்தது.

ஹைலைட்ஸ் பார்ப்போமா...

பெரிய்யய வெற்றி

பெரிய்யய வெற்றி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நடப்புத் தொடரில் கிடைத்த பெரிய வெற்றிகளில் இதுவும் ஒன்றாகும்.

35 பந்துகளில்

35 பந்துகளில்

கேப்டன் டோணியின் ஆட்டம் அட்டகாசமாக இருந்தது. சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் விளாசிய அவர் 35 பந்துகளில் 58 ரன்களைக் குவித்தார்.

ஷேவாக் வேஸ்ட்

ஷேவாக் வேஸ்ட்

டெல்லி பேட்டிங்கின்போது வீரேந்திர ஷேவாக் ரொம்ப மோசமாக ஆடினார். ரன்னே எடுக்காமல் டக் அவுட்ஆகி திரும்பினார். சுத்தமாக அவர் பார்மில்லை என்பது அப்பட்டமாக தெரிந்தது.

கேப்டன் வார்னரின் பொறுப்பு

கேப்டன் வார்னரின் பொறுப்பு

அதேசமயம், கேப்டன் பொறுப்பில் செயல்பட்ட டேவிட் வார்னர் மிகவும் சிறப்பாக ஆடி 44 ரன்களைக் குவித்தார். அவர் மட்டும்தான் அந்த அணியில் நன்றாக ஆடினார்.

135 ரன்களோடு ஸ்டாப்

135 ரன்களோடு ஸ்டாப்

டெல்லி அணியின் சேசிங் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் என்ற அளவோடு நின்று போனது.

இன்னும் ஒரே ஒரு போட்டி

இன்னும் ஒரே ஒரு போட்டி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 15 போட்டிகளில் ஆடி விட்டது. இன்னும் ஒரே ஒரு போட்டி மட்டுமே உள்ளது. அது மே 18ம் தேதி இதே சென்னையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் நடைபெறவுள்ளது. இதிலும் சென்னை வென்றால் முதலிடத்தைத் தக்க வைக்கலாம்.

பிளே ஆப் பிரிவில்

பிளே ஆப் பிரிவில்

தற்போது சென்னை, மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் பிரிவுக்குள் நுழைந்து விட்டன.

4வது அணிக்கு கடும் போட்டி

4வது அணிக்கு கடும் போட்டி

4வது அணி யார் என்பதில்தான் குழப்பம் நிலவுகிறது, கடும் போட்டியும் காணப்படுகிறது.

6 தொடரிலும் பிளே ஆப்புக்குள் நுழைந்த ஒரே அணி

6 தொடரிலும் பிளே ஆப்புக்குள் நுழைந்த ஒரே அணி

6 ஐபிஎல் தொடர்களின் பிளே ஆப் பிரிவுக்குள் நுழைந்த ஒரே அணி என்ற பெருமை தற்போது சென்னை சூப்பர் கிங்ஸுக்குக் கிடைத்துள்ளது.

அந்தோ பரிதாபம் டெல்லி...

அந்தோ பரிதாபம் டெல்லி...

டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் சோகம் தொடர்கிறது. 11வது தோல்வியை நேற்று அது தழுவியது.

வெளியூரில் ஒரு போட்டியிலும் வெற்றி இல்லை

வெளியூரில் ஒரு போட்டியிலும் வெற்றி இல்லை

நடப்புத் தொடரில், டெல்லியைத் தாண்டி ஒரு போட்டியிலும் அது வெற்றி பெறவில்லை.

பிராவோவுக்கு மறுபடியும் பர்ப்பிள் தொப்பி

பிராவோவுக்கு மறுபடியும் பர்ப்பிள் தொப்பி

சென்னை பந்து வீச்சாளர் பிராவோவுக்கு நேற்று மீண்டும் பர்ப்பிள் தொப்பி வந்து சேர்ந்தது. அவர் இதுவரை 24 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். நேற்றைய போட்டியில் அவர் 2 விக்கெட்களைச் சாய்த்தார்.

அபார பந்து வீச்சுக்கு அஸ்வின்

அபார பந்து வீச்சுக்கு அஸ்வின்

நேற்றைய போட்டியில் அஸ்வினின் பந்து வீச்சுதான் சிறப்பானதாக இருந்தது. அதாவது 4 ஓவர்களில் 19 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்களைச் சாய்த்தார் அவர்.

சுரேஷுக்கு 50 கேட்ச்

சுரேஷுக்கு 50 கேட்ச்

சுரேஷ் ரெய்னா நேற்று ஐபிஎல் வரலாற்றில் 50வது கேட்ச்சைப் பதிவு செய்தார். இவர்தான் 50 கேட்ச்களை பிடித்த முதல் பீல்டர் ஆவார்.

Story first published: Wednesday, May 15, 2013, 11:51 [IST]
Other articles published on May 15, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+