Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலாகலமாக தொடங்கியது ஐ.பி.எல் சீசன் 6... தீபிகா, கத்ரீனா கைப் கலக்கல் நடனம்

கொல்கத்தா: கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் சீசன் 6 நேற்று இரவு 7 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள சால்ட்லேக் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். விழா நாயகன் ஷாரூக்கான், பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோனே, கத்ரீனா கைப் ஆகியோரின் கலக்கல் நடனம் பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

ஐபிஎல் 5 சீசனில் கோப்பையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தட்டிச் சென்றதை அடுத்து ஐ.பி.எல் 6 போட்டிக்கான தொடக்கவிழா கொல்கத்தாவில் நடைபெற்றது.

பாலிவுட் நடிகர் ஷாரூக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மிகப்பிரம்மாண்டமாக செய்திருந்தது. அணி வீரர்களின் சம்பிரதாயமான அறிமுகத்திற்குப்பின் 300 நடனக்கலைஞர்கள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள் என பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

ஓம் வடிவில் நடனம்

ஓம் வடிவில் நடனம்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தார். ரவீந்திரநாத் தாகூர் பாடல் பின்னணியில் ஒலிக்க 300க்கும் அதிகமான நடன கலைஞர்கள் ஓம் வடிவில் நின்று நடனமாடினர் உலக புகழ்பெற்ற பாப் பாடகர் பிட்புல் இசைமழை பொழிய, ‘ஐபிஎல் பிரபஞ்சம்' என்ற ராட்சத பலூன் ஒன்று மைதானத்தில் வந்து இறங்கியது.

தீபிகா படுகோனோ வின் அசத்தல்

தீபிகா படுகோனோ வின் அசத்தல்

இந்த ஐ.பி.எல் சீசனில் தீபிகா படுகோனே நடனமாடுவார் என்று அறிவித்ததில் இருந்தே எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதை வீணாக்காமல் அழகாக நளிமாக நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார் தீபிகா.

இளவரசியாக வந்த கத்ரீனா

இளவரசியாக வந்த கத்ரீனா

பிரம்மாண்டமான மேடையில் இளவரசி உடையில் தோன்றிய கத்ரீனா அசத்தலான ஆட்டம் போட்டார்.

ஷாருக்கின் கலக்கல் நடனம்

ஷாருக்கின் கலக்கல் நடனம்

பிரம்மாண்ட விழாவின் நாயகனாக இருந்தாலும் நானும் நன்றாக நடனமாடுவேன் என்று கூறி அசத்தலாக ஆட்டம் போட்டார் ஷாரூக். குழந்தைகள், நடனக்கலைஞர்கள் என மாறி மாறி ஷாருக்கானுக்கு முத்தமழை பொழிந்தனர். உஷா உதூப், பப்பிலகரியும் இணைந்து மேடையில் நடனமாடினர்.

உஷா உதூப், பப்பி லகரி பாடல்

உஷா உதூப், பப்பி லகரி பாடல்

விழாவில் பேசிய ஷாரூக் நம்முடைய நாட்டில் மிகச்சிறப்பான இசைக்கலைஞர்களும் பாடகர்களும் இருக்கின்றனர். அவர்களை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன் என்று கூறி பாடகி உஷா உதூப், இசை அமைப்பாளர் பப்பி லகரியை மேடைக்கு அழைத்தார் இருவரும் வந்து பிரபலமான இந்திப்பாடலை பாடி மகிழ்வித்தனர்.

கங்னம் ஸ்டைல் கலக்கல்

கங்னம் ஸ்டைல் கலக்கல்

இறுதியாக ஷாரூக், தீபிகாபடுகோனே, கத்ரீனா கைப் ஆகியோர் கங்னம் ஸ்டைல் நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.

முதல்வர் மம்தா உற்சாகம்

முதல்வர் மம்தா உற்சாகம்

ஐ.பி.எல் சீசன் 6 தொடக்கவிழாவை குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலைநிகழ்ச்சிகளை உற்சாகமாக கண்டு ரசித்தார்.

பாலிவுட் நடிகர், நடிகையர்கள்

பாலிவுட் நடிகர், நடிகையர்கள்

விழா நடத்துவது பாலிவுட் நட்சத்திரம் என்பதால் அவரது நண்பர்கள் அழைப்பின் பேரில் இந்த விழாவில் பங்கேற்றனர். ஸ்ரீதேவி தனது குழந்தைகளுடன் இந்தவிழாவில் பங்கேற்றார்.

வண்ணமயமான வாண வேடிக்கை

வண்ணமயமான வாண வேடிக்கை

சியர் லீடர்ஸ், பறக்கும் டிரம்மர்கள், அக்ரோபேடிக் நடனம், சீன குழுவினரின் சாகச நிகழ்ச்சிகள் மற்றும் வண்ணமயமான வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

ஐபிஎல் 6 துவக்க விழா படங்கள்

Story first published: Wednesday, April 3, 2013, 12:28 [IST]
Other articles published on Apr 3, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+