
முதல் இறுதி - ராஜஸ்தான் சாம்பியன்
2008ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி மும்பையில் முதலாவது ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நடந்தது. அதில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

2வது சாம்பியன் ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ்
2009ல் தென் ஆப்பிரிக்காவில் 2வது ஐபிஎல் தொடரின் போட்டிகள் நடந்தன. மே 24ம் தேதி ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்த இறுதிப் போட்டியில் ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வென்று சாம்பியன் ஆனது.

3வது சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்
2010ல் நடந்த 3வது தொடரில் சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ். ஏப்ரல் 25ம் தேதி நடந்த இறுதிப் போட்டியில் அந்த அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி பட்டம் வென்றது.

மீண்டும் சென்னையே சாம்பியன்
2011ல் நடந்த தொடரிலும் சென்னையே சாம்பியன் ஆனது. மே 28ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 58 ரன்கள் வித்தியாசத்தில் நசுக்கி 2வது முறையாக சாம்பியன் ஆனது.

5வது சாம்பியன் கொல்கத்தா
2012ல் நடந்த தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் ஆனது. மே27ம் தேதி சென்னையில் நடந்த இறுதிப் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி, கொல்கத்தா முதல் முறையாக பட்டம் வென்றது. சென்னையின் இமாலய ஸ்கோரை கொல்கத்தாவின் மன்வீந்தர் பிஸ்லாவும், ஜேக்கஸ் கல்லிஸும் அபாரமாக சமாளித்து வெற்றி தேடிக் கொடுத்தனர். இதனால் சென்னை அணியின் ஹாட்ரிக் சாம்பியன் கனவு தகர்ந்தது.
இந்த முறை சாம்பியன் யாரோ...??


Click it and Unblock the Notifications











