Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியில் சேப்பாங்களான்னு தெரியலைண்ணே... சொல்கிறார் ரஹானே

மொஹாலி: இந்திய அணியில் நான் இடம் பெறுவது எனது கையில் இல்லை. நான் நன்றாக ஆடி வருகிறேன். எனது திறமையை வெளிப்படுத்தி வருகிறேன். அணியில் சேர்ப்பது குறித்து தேர்வாளர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் இளம் வீரர் அஜிங்கியா ரஹானே.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ரஹானே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சிறப்பான வெற்றி தேடித் தந்தார்.

இந்த நிலையில் ரஹானேவுக்கு மீண்டும் இந்திய அணியில்இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து ரஹானேவிடமும் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கொடுத்த பதில்....

ஒவ்வொரு போட்டியும் முக்கியம் மச்சான்

ஒவ்வொரு போட்டியும் முக்கியம் மச்சான்

இந்த நேரத்தில்நாங்கள் பிளே ஆப் குறித்து சிந்திக்கவில்லை. ஒவ்வொரு போட்டியையும் முக்கியமாக கருதி அதில்தான் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்.

பிளே ஆபுக்கு அருகே வந்தாலும்...

பிளே ஆபுக்கு அருகே வந்தாலும்...

பிளே ஆப் சுற்றுக்கு வெகு அருகே நாங்கள் வந்துள்ளோம். 18 புள்ளிகளைப் பெற்றுள்ளோம். இருப்பினும் சுற்றுப் போட்டிகளில்தான்முழுக் கவனத்தையும் செலுத்தி வருகிறோம். முதலி்ல இது, பிறகுதான் அது.

சென்னையை வெல்ல வேண்டும்

சென்னையை வெல்ல வேண்டும்

ஜெய்ப்பூரில் சென்னையை சந்திக்கும்போது அந்தப் போட்டியில் வெல்ல வேண்டும். அது முக்கியமான போட்டி. அதில்தான் கவனம் செலுத்தி வருகிறோம்.

தேர்வு என் கையில் இல்லை

தேர்வு என் கையில் இல்லை

அணித் தேர்வு என்பது எனது கையில் இல்லை. அது தேர்வாளர்கள் கையில்தான் உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி போட்டியாகட்டும், இந்திய அணியாகட்டும் எதுவாக இருந்தாலும், நான் அதில் தலையிட முடியாது. அது எனது கட்டுப்பாட்டில் இல்லை. நான் கிரிக்கெட்டை அனுபவித்து நன்றாக விளையாடுவதில்தான் அக்கறை காட்டுகிறேன். 100 சதவீத அர்ப்பணிப்புடன் ஆட முயற்சிக்கிறேன் என்றார் ரஹானே.

Story first published: Friday, May 10, 2013, 10:52 [IST]
Other articles published on May 10, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+