Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போனவாட்டி கேத்தி பெர்ரி வந்தாக.. இந்த வாட்டி ஜெனீபர் லோபஸ் வர்றாகளாம்!

கொல்கத்தா: ஐந்தாவது ஐபிஎல் தொடரின் தொடக்க விழாவில் கேத்தி பெர்ரி வந்து கலக்கி விட்டுப் போன நிலையில் தற்போது 6வது ஐபிஎல் தொடரின் தொடக்க விழாவுக்கு பிரபல பாப் பாடகி ஜெனீபர் லோபஸ் வரப் போகிறாராம்.

ஐபிஎல் போட்டி என்றால் முதலில் பணம் என்று இருந்தது. பின்னர் கலக்கல் நடனம் என்று கூடியது. இப்போது பணம் பிளஸ் கலக்கல் அழகிகள் பிளஸ் கவர்ச்சி நடனங்கள் என்று புதிய பாதைக்கு மாறி விட்டது.

5வது ஐபிஎல் தொடக்க விழாவில் கேத்தி பெர்ரியின் நடனம் அனைவரையும் ககலக்கியது. அவரது கவர்ச்சி நடனமும் பாடலும் அனைவரையும் வசீகரித்தது. அந்த வரிசையில் இந்த வருடம் கொல்கத்தாவில் நடைபெறப் போகும் 6வது ஐபிஎல் தொடக்க விழாவில் உலகையே ஒரு காலத்தில் தனது கவர்ச்சிக் காந்த குரலால் வசீகரித்து வாரிக்கட்டிய ஜெனீபர் லோபஸ் வரப் போகிறாராம்.

சால்ட்லேக் ஸ்டேடியத்தில.. ஏப்ரல் 2ம் தேதி

சால்ட்லேக் ஸ்டேடியத்தில.. ஏப்ரல் 2ம் தேதி

ஏபரல் 2ம் தேதி கொல்கத்தாவின் சால்ட்லேக் ஸ்டேடியத்தில்தான் 6வது ஐபிஎல் தொடரின் தொடக்க விழா நடைபெறவுள்ளது.

கண்கவர் ஸ்டார்கள் புடை சூழ...

கண்கவர் ஸ்டார்கள் புடை சூழ...

இந்தித் திரையுலகின் முன்னணி ஸ்டார்களை மொத்தமாக கொண்டு வந்து களம் இறக்கி ஆட விடப் போகிறார்களாம். பல முன்னணி நட்சத்திரங்கள் தொடக்க விழாவில் கலந்து கொண்டு ஆடிப் பாடவுள்ளனராம்.

ஷாருக்கான் - தீபிகா - காத்ரீனா

ஷாருக்கான் - தீபிகா - காத்ரீனா

ஷாருக்கான் இந்த நிகழ்ச்சியில் நடனமாடுகிறாராம். அதேபோல தீபிகா படுகோன், காத்ரீனா கைப் ஆகியோரும் ஆட்டம் போடவுள்ளனராம்.

ஜெனீபர்தான் ஸ்பெஷல் கெஸ்ட்

ஜெனீபர்தான் ஸ்பெஷல் கெஸ்ட்

இந்த வருடத்தின் முக்கிய விருந்தினரா, ஜெனீபர் லோபஸ் வருகிறார் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இணை உரிமையாளரான ஜூஹி சாவ்லா கூறியுள்ளார்.

அதிர வைக்கும் ஆட்டத்துடன் பாடல்

அதிர வைக்கும் ஆட்டத்துடன் பாடல்

லோபஸின் வசீகரக் குரலும், வாளிப்பான கவர்ச்சியும், அசரடிக்கும் டான்ஸும் உலகப் புகழ் பெற்றவை. பழைய பெருங்காய டப்பா என்றாலும் இன்னும் கிராக்கியுடன் இருப்பவர்தான் லோபஸ். அவர்தான் 6வது ஐபிஎல் தொடரின் சிறப்பு ஆட்டக்காரராக வருகிறார்.

Story first published: Friday, March 15, 2013, 6:59 [IST]
Other articles published on Mar 15, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+