Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சூடு பிடிக்குது ஐபிஎல் திருவிழா.. தேவதைகள் இம்சை தாங்க முடியலை...!

சென்னை ஐபிஎல் திருவிழா ஒரு வழியாக சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. பள்ளிகளுக்கு விடுமுறை விட ஆரம்பித்து விட்டனர். எனவே பசங்க கவனம் முழுவதும் டிவி பொட்டி பக்கம் தீவிரமாக திரும்ப ஆரம்பித்து விட்டது.

மைதானங்கள் நிரம்பி வழிகின்றன. மாலை நேரங்களில் மக்கள் டிவிகளில் புதைந்து கொள்ள ஆரம்பித்து விட்டனர்.

ஸ்கோர் என்ன, யார் அவுட் என்பதுதான் சாயந்திரம் 4 மணியாகி விட்டால், கிரிக்கெட் ரசிகர்களின் பேச்சாக மாறியுள்ளது.

ஐபிஎல் திருவிழாவில் கண்ட காட்சிகளின் ஒரு புகைப்படத் தொகுப்பு...

கிலி கிலியா

கிலி கிலியா

கிரிக்கெட் ரசிகர்களின் இந்த ஆண்டு தேசிய கீதம் இந்த கிலி கிலியாதான்... அதாவது சோனி டிவி இந்த ஆண்டுஐபிஎல் போட்டிகளுக்காக உருவாக்கிய குஷியான பாடல்தான் இந்த கிலி கிலியா... அதற்கு பரா கான் இடம் பெற்ற டிவி விளம்பரம் செம ஹிட்.

சாக்ஷிக்கும் நிறைய பாலோயர்கள்

சாக்ஷிக்கும் நிறைய பாலோயர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் இப்போது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதிலும் கேப்டன் டோணியின் மனைவி சாக்ஷிக்கு இப்போது ரசிகர்கள் அதிகம். சென்னை போட்டியைப் பார்க்க அவர் தவறாமல் மைதானத்திற்கு வருகிறார், வீரர்களை ஊக்குவிக்கிறார், கை தட்டியும், கவலை காட்டியும், சந்தோஷத்தை வெளிப்படுத்தியும் போட்டியை ரசிக்கிறார்.

தேவதைகள் இம்சை தாங்க முடியலை...

தேவதைகள் இம்சை தாங்க முடியலை...

வழக்கம்போல இந்த ஆண்டும் சியர் லீடர்களின் கலக்கல், கிறங்கடிக்கிறது. ஒவ்வொரு அணியிலும் கலக்கும் தேவதைகள்.. அதாவது அழகிகள் நிறைந்து வழிகிறார்கள்.

விடாமல் வருவேன்... ஷில்பா

விடாமல் வருவேன்... ஷில்பா

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இணை உரிமையாளரான ஷில்பா ஷெட்டி ஒவ்வொரு போட்டிக்கும் தவறாமல் தனது குழந்தையுடன் வந்துவிடுகிறார். கூடவே அவரது தங்கச்சியும் வருகிறார்.

சானியா கூட வந்தாரே

சானியா கூட வந்தாரே

ஆரம்பத்தில் நடந்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் போட்டிகளைக் காணவும், அணியை ஊக்கப்படுத்தவும் சானியா மிர்ஸா வந்திருந்தார்.

கப்பை வாங்கிரலாம்லே...

கப்பை வாங்கிரலாம்லே...

சென்னை சூப்பர் கிங்ஸ் வழக்கம் போல ஆரம்பத்தில்சொதப்பி இப்போது பட்டையைக் கிளப்ப ஆரம்பித்துள்ளது. கப்பை வாங்கிவிடுவார்களா.. பொறுத்திருந்து பார்ப்போம்.

எனக்கு நீ.. உனக்கு நான்

எனக்கு நீ.. உனக்கு நான்

இந்தத் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார் பெங்களூர் கிளி தீபிகா படுகோன். அதாவது பெங்களூர் ஆடாத போட்டிகளில் கொல்கத்தாவை ஆதரிப்பாராம். அதேபோல கொல்கத்தா இல்லாத போட்டிகளில் பெங்களூரை ஆதரிப்பாராம் ஷாருக் கான்.

மெட்ராஸ் பக்கம் போக முடியாம பண்ணிட்டாங்களே...

மெட்ராஸ் பக்கம் போக முடியாம பண்ணிட்டாங்களே...

இலங்கை வீரர்கள் இந்த முறை மெட்ராஸ் பக்கமே வர முடியாமல் போய் விட்டது. அதுகுறித்து கவலையுடன் விவாதிக்கிறார்களா இந்த மூவரும்...

அத்தனை வீடுகளும் ஐபிஎல்லை நோக்கி

அத்தனை வீடுகளும் ஐபிஎல்லை நோக்கி

உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனம முழுக்க இப்போது ஐபிஎல்லில்தான். அத்தனைப் பாதையும் ரோம் நகரை நோக்கி என்று சொல்வார்கள். ஆனால் இந்தியாவிலோ, அத்தனை வீடுகளும் ஐபிஎல்லை நோக்கித்தான் இப்போது தீவிர கவனத்தில்....

Story first published: Tuesday, April 16, 2013, 7:25 [IST]
Other articles published on Apr 16, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+