
ஐபிஎல் போட்டிகளில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எப்படியாவது நீக்கிவிட வேண்டும் என்பதற்காகவே நேற்று முதல் திட்டமிட்ட பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் சென்னை அணிக்கும் இடையேயான ஒப்பந்தத்தின் ஷரத்துகளை வரிக்கு வரிக்கு வெளியிட்டு சென்னை அணியை வெளியேற்றுவதற்காக போராடி வருகின்றனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த சென்னை அணியின் கேப்டன் டோணி, சென்னை அணியை நீக்கிவிட்டால் நான் ஐபிஎல் போட்டியிலேயே விளையாட மாட்டேன் என்று அறிவித்தார். இதுவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை உடனடியாக நீக்கப் போவது இல்லை என்று கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருக்கிறது. இதனால் டோணி நிம்மதி பெருமூச்சுவிட்டிருக்கிறார். நாளை நடைபெற இருக்கும் இறுதிப் போட்டியில் மும்பையை வீழ்த்தி சென்னை அணி தனது வலுவை நிரூபிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.