Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐ.பி.எல்: இலங்கை வீரர்களுக்காக சென்னை 'பிளே ஆப்' போட்டிகள் டெல்லிக்கு மாற்றம்!

IPL 6 play-off matches shifted to Delhi from Chennai
டெல்லி: ஐபிஎல்-6 தொடரின் முதல் சுற்று லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் நடைபெறும் போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாட தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இதையடுத்து, சென்னையில் நடைபெறும் போட்டிகளில் மட்டும் இலங்கை வீரர்களை ஐபிஎல் அணிகள் தவிர்த்து வருகின்றன. இலங்கை வீரர்கள் சென்னை தவிர மற்ற ஊர் மைதானங்களில் விளையாடி வருகின்றனர்.

லீக் ஆட்டங்களில் வாங்கும் புள்ளிகளை வைத்து 4 அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தேர்வு செய்யப்படவுள்ளன. இதில் வெல்லும் அணிகளே இறுதிச் சுற்றுக்குள் வர முடியும்.

இதில் முதல் இரண்டு பிளே ஆப் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தன.

முதல் பிளே ஆப் போட்டி மே 21ம் தேதியும், ஒரு அணியை வெளியேற்றும் நாக்-அவுட் போட்டி 22ம் தேதியும் நடைபெற இருந்தது.

ஆனால், பல்வேறு தடைகளைத் தாண்டி பிளே ஆப் சுற்றில் ஆடும்போது, இலங்கையின் முன்னணி வீரர்கள் இல்லாமல் வலுவான அணியை தேர்வு செய்ய முடியாது என்றும், அதனால் அவர்களும் கண்டிப்பாக பங்கேற்க அனுமதிக்க வகை செய்ய வேண்டும் என்றும் அணிகளின் உரிமையாளர்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்தை நெருக்கி வருகின்றன.

இதையடுத்து பிபிபிஐயின் ஐ.பி.எல். நிர்வாகம், இலங்கை வீரர்கள் விளையாடும் வகையில், சென்னை பிளே ஆப் போட்டிகளை டெல்லிக்கு மாற்றியுள்ளது.

சென்னையில் நடைபெற இருந்த அதே நாளில் இப்போட்டிகள் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெறவுள்ளன. முன்னதாக இந்தப் போட்டிகளை பெங்களூருக்கு மாற்ற திட்டமிடப்பட்டது. ஆனால், இறுதியில் டெல்லிக்கு மாற்றுவதென முடிவு செய்யப்பட்டுவிட்டது.

Story first published: Sunday, April 28, 2013, 11:30 [IST]
Other articles published on Apr 28, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+