Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள்: நெம்.1 பேட்ஸ்மேனாக வீரேந்திர சேவாக்! ஹர்பஜனுக்கு 3-வது இடம்!!

பெங்களூர்: சர்வதேச போட்டிகளில் வீரேந்திர சேவாக் ரன்களை எடுக்க திணறினாலும் ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்த வீரர் என்ற பெருமைக்குரியவராக இருக்கிறார்.

வீரேந்திர சேவாக் அண்மையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். அவர் தற்போது நடைபெற இருக்கும் ஐபிஎல் 6வது தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் விளையாடுகிறார். ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்தும் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டால் மீண்டும் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும்.

வீரேந்திர சேவாக்கைத் தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் புயல் கெயில் 2-வது இடத்திலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹர்பஜன்சிங் 3-வது இடத்திலும் இருக்கின்றனர்.

இதுவரையிலான ஐபிஎல் போட்டிகளில் டாப் 5 பேட்ஸ்மேன்கள்

வீரேந்திர சேவாக்

வீரேந்திர சேவாக்

66 இன்னிங்ஸ்களில் 1123 பந்துகளை எதிர்கொண்டு 1879 ரன்களை எடுத்து முதல் இடத்தில் இருக்கிறார் டெல்லி டேர்டெவில்ஸின் வீரேந்திர சேவாக். இதில் 225 பவுண்டரிகள், 79 சிக்சர்கள், 15 அரை சதம், 1 சதம் அடங்கும். மொத்தம் 167.31 புள்ளிகள் எடுத்திருக்கிறார்.

கிறிஸ் கெயில்

கிறிஸ் கெயில்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கிறிஸ் கெயில் டாப் 5 பேட்ஸ்மேன்களில் 2-வது இடத்தைப் பிடித்திருக்கிறார். 42 இன்னிங்ஸ்களில் 1115 பந்துகளை எதிர்கொண்டு 1804 ரன்கலைக் குவித்திருக்கிறார். இதில் 147 பவுண்டரிகள், 129 சிக்சர்கள், 12 அரை சதங்கள், 3 சதங்கள் அடங்கும். மொத்தம் 161.79 புள்ளிகள் பெற்றிருக்கிறார்.

ஹர்பஜன்சிங்

ஹர்பஜன்சிங்

மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹர்பஜன் சிங் 3-வது இடத்தைப் பெற்றூள்ளார். அவர் 39 இன்னிங்ஸ்களில் 284 பந்துகளில் 430 ரன்களை எடுத்திருக்கிறார். இதில் 42 பவுண்டரியும் 22 சிக்சர்களும் அடங்கும். அவர் 151.40 புள்ளிகள் பெற்றுள்ளது ஆச்சரியத்தை அளிக்கிறது.

யூசுப் பதான்

யூசுப் பதான்

கொல்கத்தா நைட் ரைடர்ஸணியின் யூசுப் பதான் 69 இன்னிங்ஸ்களில் 997 பந்துகளை எதிர்கொண்டு 1,488 ரன்களை எடுத்திருக்கிறார். இதில் 123 பவுண்டரிகள், 81 சிக்சர்கள்,6 அரசைதம், 1 சதம் அடங்கும். மொத்தம் அவருக்கு 149.24 புள்ளிகள் கிடைத்துள்ளது.

டிவைன் ஸ்மித்

டிவைன் ஸ்மித்

மும்பை இந்தியன்ஸ் அணியின் டிவைன் ஸ்மித் 20 இன்னிங்ஸ்களில் 295 பந்துகளை எதிர்கொண்டு 439 ரன்களை எடுத்திருக்கிறார்.இதில் 36 பவுண்டரிகளும் 24 சிக்சர்களும்1 சதமும் அடங்கும்.

Story first published: Tuesday, April 2, 2013, 8:55 [IST]
Other articles published on Apr 2, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+