Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மக்கி மலிங்கா, ஹெலிகாப்டர் டோணி, மாடல் யுவராஜ், ராவணன் கெய்ல்... புக்கிகளின் சூப்பர் 'கோட்'!

மும்பை: கிரிக்கெட் சூதாட்ட புக்கிகள் பயன்படுத்தும் கோட் வார்த்தைகள் குறித்த ஒரு பட்டியலை போலீஸார் சேகரித்துள்ளனர்.

ஸ்பாட் பிக்ஸிங் விவகாரத்தை டெல்லி போலீஸாரும், பல்வேறு ஊர் போலீஸாரும் தொடர்ந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இதில் புக்கிகள் பயன்படுத்தும் சங்கேத வார்த்தைகள் குறித்த விவரம் தெரிய வந்துள்ளது. வீரர்களுக்கு அவர்கள் வைத்துள்ள சங்கேத வார்த்தைகள் குறித்த விவரமும் இதில் கிடைத்துள்ளதாம்.

ஒட்டுக் கேட்பதிலிருந்து தப்பிக்க

ஒட்டுக் கேட்பதிலிருந்து தப்பிக்க

போனில் பேசும்போது இந்த சங்கேத வார்த்தைகளைத்தான் புக்கிகள் பயன்படுத்தியுள்ளனர். இதன் மூலம் போலீஸார் ஒருவேளை போனை ஒட்டுக் கேட்டாலும் கூட தப்பித்துக் கொள்ளலாம் என்பது அவர்களது நினைப்பு.

சங்கேதத்தை போட்டுக் கொடுத்து விண்டு

சங்கேதத்தை போட்டுக் கொடுத்து விண்டு

ஆனால் தற்போது இந்த சங்கேத வார்த்தைகளின் அர்த்தத்தை விண்டு தாராசிங் மூலமாக உடைத்துள்ளனர் மும்பை போலீஸார். அத்தனை சங்கேத வார்த்தைகளையும் சொல்லிக் கொடுத்து அதற்கான அர்த்தத்தையும் தெளிவாக போட்டுக் கொடுத்து விட்டாராம் விண்டு.

புக்கிகளின் குருஜி

புக்கிகளின் குருஜி

புக்கிகள் வட்டாரத்தில் குருநாத் மெய்யப்பனை குருஜி என்று சுருக்கிக் கூப்பிடுவார்களாம்.

ஜாக்கீ....

ஜாக்கீ....

அதேபோல விண்டு சிங்குக்கு செல்லப் பெயர் ஜாக் என்பதாகும்.

ரோட்ருன்னா யாரு தெரியுமா...

ரோட்ருன்னா யாரு தெரியுமா...

ஸ்ரீசாந்த்துக்கு ரோட்ரு என்று பெயர் வைத்துள்ளனர். அப்படீன்னா என்ன அர்த்தம் என்று தெரியவில்லை.

விக்டர் பாஸ்

விக்டர் பாஸ்

அதேபோல சென்னை ரேடிசன் ஹோட்டல் அதிபர் விக்ரம் அகர்வாலை விக்டர் பாஸ் என்று செல்லமாக குறிப்பிட்டுள்ளனர்.

ஹெலிகாப்டர்....

ஹெலிகாப்டர்....

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோணிக்கு ஹெலிகாப்டர் என்று பெயர் வைத்துள்ளனர். அவர் ஹெலிகாப்டர் ஷாட் அடிப்பதால் இந்தப் பெயர் போல.

ராவணன் கெய்ல்

ராவணன் கெய்ல்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கிறிஸ் கெய்லுக்கு ராவண் என்று பெயராம.

மக்கி மலிங்கா..மாடல் யுவராஜ்

மக்கி மலிங்கா..மாடல் யுவராஜ்

அதேபோல மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சாளர் மலிங்காவை மக்கி என்றும், யுவராஜ் சிங்கை மாடல் என்றும் அழைத்துள்ளனர்.

அழகிகளுக்கும் கூட செல்லச் செல்லப் பெயர்கள்

அழகிகளுக்கும் கூட செல்லச் செல்லப் பெயர்கள்

வீரர்கள், புக்கிகளுக்கு மட்டுமல்லாமல் தாங்கள் பயன்படுத்திய விபச்சார அழகிகள், இளம் பெண்களுக்கும் இவர்கள் செல்லப் பெயர் வைத்து அழைத்துள்ளனராம்.

டைரி - ஐபேட்

டைரி - ஐபேட்

பறிமுதல் செய்யப்பட்ட டைரிகள், ஐபேட் போன்றவற்றில் இந்த சங்கேதப் பெயர்கள் குறித்த விவரமும் இடம் பெற்றுள்ளதாம்...

பிரம்மாதம்யா...!

Story first published: Thursday, May 30, 2013, 15:23 [IST]
Other articles published on May 30, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+