அடேங்கப்பா... ஐபிஎல் போட்டிகளில் ரூ 1 கோடி வரை பெட் கட்டிய குருநாத் மெய்யப்பன்!

குறைந்தது ரூ. 10 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை அவர் பெட் கட்டி வந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 2011ம் ஆண்டிலிருந்தே அவர் பெட்டிங்கில் ஈடுபட்டுள்ளதாகவும் மும்பை போலீஸ் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் 3 சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிகளில் அவர் மிகப் பெரிய தொகைக்கு பெட் கட்டியுள்ளதாகவும் போலீஸார் கூறுகின்றனர். மேலும் வேறு சில போட்டிகள் மீதும் அவர் பெட் கட்டியுள்ளாராம்.
நேற்று குருநாத் மெய்யப்பனை விசாரிக்க மும்பை போலீஸார் சென்னை வந்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து இன்று மாலை 5 மணிக்குள் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் கொடுத்து விட்டுப் போயுள்ளனர்.
குருநாத்துக்கும், விந்தூ தாராசி்ங்குக்கும் இடையே கிட்டத்தட்ட 30 தொலைபேசி அழைப்புகள் போயுள்ளதாகவும் போலீஸார் கூறுகின்றனர்.
Story first published: Friday, May 24, 2013, 10:37 [IST]
Other articles published on May 24, 2013


Click it and Unblock the Notifications