ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங்: ஐபிஎல் போட்டி முடியும் வரை மெய்யப்பனிடம் விசாரணை இல்லை?

ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பாக மும்பையில் கைது செய்யப்பட்ட மறைந்த பாலிவுட் நடிகர் வின்து தாரா சிங் தனக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிஇஓ குருநாத் மெய்யப்பனுக்கும் தொடர்பு உண்டு என்று போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்த மும்பை போலீசார் நேற்று சென்னை வந்தனர்.
அவர்கள் மெய்யபனின் வீட்டுக்கு சென்றபோது அவர் வீட்டில் இல்லை. இதையடுத்து இன்று காலை 11 மணியில் இருந்து மாலை 5 மணிக்குள் தங்கள் முன்பு ஆஜராகுமாறு அவர்கள் மெய்யப்பனின் வீட்டில் சம்மனை ஒட்டிவிட்டு வந்தனர். இந்நிலையில் போலீசார் முன்பு ஆஜராக தனக்கு வரும் திங்கட்கிழமை வரை கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று மெய்யப்பன் கேட்டுக் கொண்டார்.
அவரது கோரிக்கையை போலீசார் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் முடியும் வரை அவரிடம் விசாரணை நடத்தப்பட மாட்டாது என்று கூறப்படுகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications