Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மேட்ச் பிக்ஸிங்: ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 வீரர்களும் சஸ்பெண்ட்

IPL spot-fixing: Sreesanth, 2 others suspended
மும்பை: ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் செய்து சிக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் 3 பேரையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் மற்றும் அஜீத் சாண்டிலா ஆகியோர் ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து டெல்லி போலீசார் அந்த 3 பேரையும் இன்று காலை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 3 வீரர்களையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) சஸ்பெண்ட் செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட மூவரும் இன்று மதியம் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

கிரிக்கெட் வீரர்கள் தவிர டெல்லியில் 7 புக்கீகளும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, May 16, 2013, 12:04 [IST]
Other articles published on May 16, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+