Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் போட்டிகளை பிடித்த ஸ்பாட் பிக்ஸிங் கிரகம்: 2012ல் 5 வீரர்கள் சிக்கினர்

டெல்லி: கடந்த ஆண்டு நடந்த ஐபில் போட்டிகளின் போது ஸ்பாட் பிக்ஸிங் குற்றச்சாட்டில் சிக்கிய 5 வீரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் செய்ததற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த ஸ்ரீசாந்த், அங்கித் சவான் மற்றும் அஜீத் சாண்டிலா ஆகியோர் டெல்லி போலீசாரால் இன்று காலை கைது செய்யப்பட்டனர். மேலும் 7 புக்கீகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளின்போதும் லீக் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் செய்த குற்றத்திற்காக 5 வீரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமித் யாதவ்

அமித் யாதவ்

கிங்ஸ் XI பஞ்சாப் அணியைச் சேர்ந்த அமித் யாதவ் ஸ்பாட் பிக்ஸிங்கில் சிக்கியதால் அவர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் 1 ஆண்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

மோனிஷ் மிஷ்ரா

மோனிஷ் மிஷ்ரா

புனே வாரியர்ஸ் அணியைச் சேர்ந்த மோனிஷ் மிஷ்ராவும் ஸ்பாட் பிக்ஸிங் குற்றத்திற்காக

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் 1 ஆண்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

அபினவ் பாலி

அபினவ் பாலி

இந்தியன் கிரிக்கெட் லீக்கில் டெல்லி ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாடிய அபினவ் பாலி ஸ்பாட் பிக்ஸிங் செய்து சிக்கியதால் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் 1 ஆண்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

டிபி சுதீந்திரா

டிபி சுதீந்திரா

டெக்கன் சார்ஜர்ஸ் அணி வீரர் டிபி சுதீந்திரா ஸ்பாட் பிக்ஸிங் செய்ததற்காக அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.

சலப் ஸ்ரீவாஸ்தவா

சலப் ஸ்ரீவாஸ்தவா

கிங்ஸ் XI பஞ்சாப் அணியைச் சேர்ந்த சலப் ஸ்ரீவாஸ்தவா ஸ்பாட் பிக்ஸிங் செய்து சிக்கயதால் அவர் 5 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டது.

Story first published: Thursday, May 16, 2013, 11:21 [IST]
Other articles published on May 16, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+