அடுத்த 'டோணி' சஞ்சு சாம்சன்.....???
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த டோணி, சஞ்சு சாம்சன்தான். அதில் சந்தேகமே இல்லை என்று அடித்துக் கூறுகிறார் இந்தியாவின் விக்கெட் கீப்பர் ஜாம்பவான் பரூக் என்ஜீனியர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இந்தியாவின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு சஞ்சு சாம்சன்தான் என்பது இவரது வாதம்.
சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பர் -பேட்ஸ்மேன் ஆவார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தூணாக விளங்கி வருகிறார் சஞ்சு. அவரைத்தான் என்ஜீனியர் இப்படிப் புகழ்ந்துள்ளார்.

2013ன் சிறந்த கண்டுபிடிப்பு சஞ்சு
இதுகுறித்து பரூக் என்ஜீனியர் கூறுகையில் 2013 ஐபிஎல் போட்டியின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு சஞ்சு சாம்சன்தான். மிக அழகாக ஆடுகிறார் சஞ்சு.

வயதை மீறிய முதிர்ச்சி
சஞ்சு சாம்சன் அவரது வயதையும் மீறிய முதிர்ச்சியுடன் காணப்படுகிறார். மிகவும் நேர்மறையான எண்ணத்துடன் இருக்கிறார். இது ஆச்சரியமானது.

எதிர்காலம் இவருக்கே
சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பிங்கில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் பிரமாதப்படுத்துகிறார். நம்பிக்கையுடன் எதையும் எதிர்கொள்கிறார். எதிர்காலத்தில் மிகப் பெரிய வீரராக இவர் வருவார் என்பதில் சந்தேகமில்லை என்றார் பரூக்.
எனவே, அடுத்த எம்.எஸ்.டோணியாக சஞ்சு வருவாரா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. எப்பவுமே இப்படித்தான் பாஸு. எதையுமே, யாராவது கிளப்பி விட்டுத்தான் நம்மூ்ரில் போணி செய்வாங்க...!


Click it and Unblock the Notifications