Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2008 'கன்னத்தில் அடி'யின் தொடர்ச்சியா?.. ஸ்ரீசாந்த்தை மாட்டி விட்டுள்ளனரா???

டெல்லி: 2008ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரின்போது தன்னை ஹர்பஜன் சிங் அடித்தது தொடர்பாக சமீபத்தில் மீண்டும் பிரச்சினை கிளப்பியிருந்தார் ஸ்ரீசாந்த். எனவே அதன் எதிரொலியாக ஸ்ரீசாந்த்தை யாரேனும் வேண்டும் என்றே மாட்டி விட்டு வேடிக்கை பார்க்கிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

2008ம் ஆண்டு ஐபிஎல் போட்டியின்போது நடந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மனதிலிருந்து இன்னும் விலகவில்லை.

அந்தத் தொடரின்போது ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த் கன்னத்தில் விட்ட பளார் அறை இன்னும் கூட ரசிகர்களின் காதுகளை விட்டு நீங்கவில்லை.

மும்பை கேப்டன் ஹர்பஜன் சிங்

மும்பை கேப்டன் ஹர்பஜன் சிங்

அந்தத் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின்கேப்டனாக இருந்தவர் ஹர்பஜன் சிங். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பெற்றிருந்தார் ஸ்ரீசாந்த்.

திடீர் மோதல்.. பளார் அறை

திடீர் மோதல்.. பளார் அறை

போட்டியின்போது திடீரென ஹர்பஜன் சிங்குக்கும், ஸ்ரீசாந்த்துக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது ஸ்ரீசாந்த் கன்னத்தில் பளார் என அறைந்து விட்டார் ஹர்பஜன் சிங்.

கேவிக் கேவி அழுத ஸ்ரீசாந்த்

கேவிக் கேவி அழுத ஸ்ரீசாந்த்

இதை எதிர்பாராத ஸ்ரீசாந்த் கேவிக் கேவி அழுதார். அவரை அமைதிப்படுத்த சக வீரர்கள் கடுமையாக முயன்றார். ஆனால் பச்சைப் புள்ள போல அழுத ஸ்ரீசாந்த்தைப் பார்த்து ரசிகர்கள் பரிதாப்பட்டனர்.

சமீபத்தில் மீண்டும் சர்ச்சை

சமீபத்தில் மீண்டும் சர்ச்சை

இந்த விவகாரம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி ஓய்ந்தநிலையில் சமீபத்தில் மீண்டும் இந்த விவகாரத்தைக் கிளப்பினார் ஸ்ரீசாந்த்.

கம்பீரை வம்புக்கிழுத்த கோஹ்லி

கம்பீரை வம்புக்கிழுத்த கோஹ்லி

சமீபத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கும், ராயல் சேலஞ்சர் பெங்களூர் அணிக்கும் இடையிலான போட்டியின்போது கோஹ்லிக்கும், கம்பீருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது கம்பீரை கடுமையாக விமர்சித்திருந்தார் கோஹ்லி.

முதுகில் குத்திய ஹர்பஜன்.. ஸ்ரீசாந்த் குற்றச்சாட்டு

முதுகில் குத்திய ஹர்பஜன்.. ஸ்ரீசாந்த் குற்றச்சாட்டு

இந்த விவகாரத்தைக் குறிப்பிட்டு டிவிட்டரில் கருத்து தெரிவித்திருந்த ஸ்ரீசாந்த், தனக்கு 2008ம் ஆண்டுநடந்த சம்பவத்தி்ன்போது நியாயம் கிடைக்கவில்லை என்று கூறியிருந்தார். தன்னை முதுகில்குத்தி விட்டார் ஹர்பஜன் சிங் என்றும் அவர் வர்ணித்திருந்தார்.

உடனே ஸ்ரீசாந்த்தை எச்சரித்த பிசிசிஐ

உடனே ஸ்ரீசாந்த்தை எச்சரித்த பிசிசிஐ

இதையடுத்து ஸ்ரீசாந்த்துக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அடித்துப் பிடித்துக் கொண்டு எச்சரிக்கை விட்டது. இனிமேல் இப்படிப் பேசினால் நடப்பதே வேறு என்றும் மிரட்டியது. இதனால் டிவிட் அனுப்புவதை நிறுத்தினார் ஸ்ரீசாந்த்.

பின்னணியில் யார்..?

பின்னணியில் யார்..?

இந்தநிலையில்தான் தற்போது ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக கூறி ஸ்ரீசாந்த்தைக் கைது செய்துள்ளனர். இது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடவுள் நம்பிக்கை மிக்கவர் ஸ்ரீசாந்த். கொஞ்சம் சேட்டைக்காரர்தான் என்றாலும் கூட இப்படி ஸ்பாட் பிக்ஸிங் செய்யும் அளவுக்கு அவர் போவாரா என்று அத்தனை பேரும் ஆச்சரியப்படுகின்றனர்.

எனவே யாருடைய துண்டுதலிலாவது அவரை வேண்டும் என்றே மாட்டி விட்டுள்ளனரா என்ற கேள்வி எழுகிறது.

Story first published: Thursday, May 16, 2013, 13:41 [IST]
Other articles published on May 16, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+